எப்படி மிஸ் பண்ணீங்க? இப்போ வந்து சொல்றீங்க.. ஜீரணிக்கவே முடியல.. கோபமாக கடுப்படித்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். கொடியில் இடம்பெற்ற யானையின் உருவப்படத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறது.

யானை உருவத்தை கொடியில் இருந்து நீக்காவிட்டால் கோர்ட்டுக்கும் போகும் முடிவிலும் அக்கட்சியின் தலைமை இருக்கிறது. கொடியில் இடம் பெற்ற யானைக்கு சிக்கல் எழுந்த நிலையில், எங்கள் சங்கத்தின் கொடியை விஜய் பயன்படுத்தியிருப்பதாக புகார் கொடியை மாற்ற வேண்டும் என்று ஒரு சமுதாய இயக்கம் போர்க்கொடி உயர்த்துகிறது.

vijay tvk

விஜயால் ஜீரணிக்க முடியவில்லை: கொடிக்கும், அதில் இடம்பெற்ற யானைக்கும் எதிர்ப்புக் கிளம்புவதை விஜய்யால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லையாம். பொதுவாக ஒரு விசயத்தை தொடங்கும் முன் நிறைய விவாதம், ஆலோசனை நடத்தி விட்டு பிறகே முடிவெடுப்பாராம் விஜய். அப்படியிருக்கையில், இந்த விசயம் இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை என தனக்கு ஆலோசனை வழங்குபவர்களிடம் கடுப்படித்துள்ளார் விஜய்.

ஏற்கனவே, தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்திய போது, தமிழக வெற்றி கழகம் என்பது சரியல்ல ; வெற்றிக்கழகம் என்பதுதான் சரி என்கிற சர்ச்சை எழுந்த போதும் இதே பிரச்சனை வெடித்தது. அதன் பிறகு வெற்றிக்கழகம் என தனது கட்சியின் பெயரை மாற்றிக் கொண்டார். அதேபோல, இப்போது கொடிக்கும் அதில் இடம்பிடித்துள்ள யானைக்கும் எதிர்ப்பு வந்துள்ளது. விரைவில் இது குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை தர விருக்கிறார் விஜய்.

விஜய் அரசியல்: இது போக நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதே சமயம் கொடிக்கான விளக்கத்தை மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறி உள்ளார்.

மாநாடு நடக்க உள்ளது: இதையடுத்து விரைவில் தவெகவின் மாநாடு நடக்க உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். ஏ என்ற இனிஷியல் கொண்ட நபரும்.. இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் விஜயின் தமிழக வெற்றிகழக கட்சியில் இணைய உள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+