Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்குநேரி சின்னத்துரைக்கு விஜய் வழங்கிய ஊக்கத் தொகை எவ்வளவு? எத்தனை பேருக்கு வைர நகை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது, ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் எத்தனை பேருக்கு வைர நகை கிடைத்தன தெரியுமா? அது போல் நாங்குநேரி சின்னத்துரைக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையின் விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் அமைப்பைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த ஆண்டு முதல் 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறார்.

nanguneri chinnadurai actor vijay

69 ஆவது படத்தில் நடிகர் விஜய், அந்த படத்திற்கு பிறகு அதிலிருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் இலக்கு என்ற லட்சியத்தை நோக்கி விஜயும் அவருடைய கட்சியினரும் பயணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரண்டாவது முறையாக 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு, ஊக்கத் தொகை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் பாஸ் கொடுத்தனர். அந்த பாஸ் இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அது போல் நிகழ்ச்சி முடியும் வரை , செல்போன், நோட்டுப் புத்தகங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவற்றை நிர்வாகிகள் வாங்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சி முடிந்து சென்ற போது திருப்பி அளித்தனர். விஜய் நிகழ்ச்சிக்கு வந்த போது தளபதி பாடல் ஒலிக்கப்பட்டது.

விஜய்க்கு மாணவர்களும் பெற்றோர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கரவொலியும் விசில் சப்தமும் அடங்கவே 15 நிமிடங்கள் ஆனது. இதையடுத்து விஜய் ஒவ்வொருத்தருக்காக பரிசு பொருட்களை அளித்தார். அதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னையை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மல் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரி தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல், காவியா ஸ்ரீ, ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவ்யா ஜனனி, நெல்லை சஞ்சனா, ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன. அது போல் ஜாதிய வன்கொடுமை காரணமாக தாக்குதலுக்குள்ளான நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரையின் அருகே உட்கார்ந்த விஜய் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்கு ஊக்கத் தொகையாக ரூ 5000 வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் ஏன் தங்களை பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய் என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தோர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவத்தை கேட்டு சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரைக்கு ஆசிரியர் ஒருவர் தினமும் போய் பாடம் நடத்தியிருந்தார். இப்படிப்பட்ட சூழலிலும் நன்கு படித்த சின்னத்துரை தமிழில் 71 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 93 மதிப்பெண்களும் எக்கனாமிக்சில் 42 மதிப்பெண்களும், காமர்சில் 84 மதிப்பெண்களும், அக்கவுண்டன்சியில் 85 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 94 மதிப்பெண்களும் பெற்றார். மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+