விஜய்க்கு Y தான்..கங்கனாவுக்கு Y+.. இந்திய அளவில் மத்திய பாதுகாப்பு பெறும் பிரபலங்கள் யார் தெரியுமா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு "Y" பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை அமைப்புகள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில் தற்போது, 11 பேர் பிஸ்டல் மற்றும் ஸ்டன் கன்னுடன் சுழற்சி முறையில் விஜய்க்கு பாதுகாப்பு தரவுள்ளனர். X, Y, Z, Y+, Z+ மற்றும் SPG பிரிவு பாதுகாப்பு பிரிவுகளில் பாதுகாப்பு பெரும் பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து பார்க்கலாம்..
நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. 8 முதல் 11 சிஆர்பிஎஃப் காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

ஒரே நேரத்தில் இல்லாமல் சுழற்சி முறையில் விஜய்க்கு இவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், அச்சுறுத்தல் பட்டியலில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களுக்கு கூட அரசு சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது விஜய்க்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை X, Y, Z, Y+, Z+, SPG என்ற வகைகளில் தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பிரிவுகளில் பாதுகாப்பு பெரும் பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து பார்க்கலாம்..
X பிரிவு: X பிரிவில் 2 பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்களில் நீதிபதிகள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில்) உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
Y பிரிவு: ஒய் பிரிவு பாதுகாப்பை பொறுத்தவரை காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது விஜய் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Y+ பாதுகாப்பு: Y + பாதுகாப்பை பொறுத்தவரை இந்திய அளவில் ஷாருக் கான், சல்மான் கான், கங்கனா ரனாவத், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் பெறுகின்றனர்.
Z பிரிவு: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகண்ட்டின் புஷ்கர் சிங் தாமி, பாபா ராம்தேவ், அமீர் கான் உள்ளிட்டோர் இசட் பிரிவு பாதுகாப்பை பெற்றுள்ளனர்.
Z+ பிரிவு: Z+ பாதுகாப்பை பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு படை எனப்படும் என்எஸ்ஜி குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
SPG பாதுகாப்பு: இந்தியாவைப் பொறுத்தவரை உச்சபட்ச பாதுகாப்பு என்றால் அது SPG தான். தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ராகுல் காந்தி பிரியங்கா காந்திக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு அது நீக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படும் படி விதிகள் திருத்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications