'தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு' - டெல்லி கணேஷ் மறைவுக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்
சென்னை: மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிப்பால் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திர கதாப்பாத்திரங்கள், காமெடி, வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது அசாத்திய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். எல்லோரிடமும் மிகுந்த அன்பாகவும், இயல்பாகவும் பழகும் பண்பு கொண்டவர்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு டெல்லி கணேஷின் சொந்த ஊராகும். இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றி வந்த நிலையில், திரைத் துறையின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக அப்பணியை உதறிவிட்டு திரைத் துறைக்கு வந்தவர். இயக்குநர் கே.பாலச்சந்தரால் டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் சுமார் 400க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு உறங்கச் சென்ற நிலையில் 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ” மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது.
40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications