நியாயம்ன்னா ஏற்கணும்! பஞ்ச் சொன்ன விஜய்! இனி தமிழக வெற்றிக் கழகம்! வந்தாச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக வந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு கட்சியின் பெயரில் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக திருத்தியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் அண்மைக்காலமாக அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு நலத்திட்டங்களை செய்யுமாறு உத்தரவுகளை பிறப்பித்து விஜய் மக்கள் இயக்கத்தை சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருந்தார்.

அது போல் சூட்டிங் இருந்தாலும் அதற்காக புறப்படும் நேரத்திற்கு முன்பு வரை கூட நிர்வாகிகளுடன் பனையூரில் ஆலோசனை கூட்டங்களை விஜய் நடத்தி வந்தார். அந்த வகையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நடந்த கூட்டத்தில்தான் விஜய் கட்சியின் பெயரை அறிவிக்கிறார் என்ற தகவல் அரசல் புரசலாக தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அதாவது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தார். முன்னதாக டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்திருந்தார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் தனது அறிக்கையில் கூறியிருந்ததாவது: வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது. எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. இவ்வாறு விஜய் ஒரு நீளமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி உதயமானது முதல் அந்த பெயர் குறித்து சிலர் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அதாவது வெற்றிக் கழகமா, வெற்றி கழகமா என கேட்டு வந்தனர். இதை பாஜக மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகரே எழுப்பியிருந்தார்.
அது போல் தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் வெற்றி கழகத்தின் இடையே "க்" என்பதை சேர்க்க வேண்டும் என்றார்கள். இந்த நிலையில் இயக்குநர் அமீரோ எழுத்து பிழை கூட பரவாயில்லை. அவரது கட்சியின் பெயரில் இலக்கண பிழை இருக்கிறது. தமிழகமா தமிழ்நாடா? , தமிழ்நாடு என்று உச்சரிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அமீர் தெரிவித்திருந்தார்.
அது போல் இசையமைப்பாளர் சமூகஆர்வலர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது: 'வெற்றிக் கழகம்' என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? எனவே வெற்றிக் கழகம் என்பதுதான் சரி.
விஜய்யின் கட்சி பெயரில் வெற்றி கழகத்தில் ஒற்று பிழை உள்ளது என தமிழ் அறிஞர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தாலும் வெற்றிக் கழகம் என "க்" வைத்து மாற்றித்தான் பதிவு செய்தாக வேண்டும். மொழியில் பிழை என சொல்லும் போதே அதை சரி செய்து மொழியை காக்க திராணி இல்லாதவர், எப்படி அந்த மொழியை பேசும் இனத்தை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. விஜய் இதை மாற்றித்தான் ஆக வேண்டும். ஒரு தமிழனா இதை முழுக்க முழுக்க உரத்த குரலில் எதிர்ப்பேன் என்றார்.
இப்படி தொடர் விமர்சனங்கள் வந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் உள்ள எழுத்துப்பிழையை திருத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. தவறு என சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், தனது கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்று கொடுக்கப்பட்ட செய்தித் தாள் விளம்பரங்களிலும் கூட தமிழக வெற்றிக் கழகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications