அதே நாள்.. லைட்டை பூரா தன் பக்கம் திருப்பிய விஜய்! அரசியல் என்ட்ரிக்கு ‘அஸ்திவாரம்’: அதிரும் களம்!
சென்னை : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பது தொடர்பாக பல்வேறு பேச்சுகள் இருந்துவரும் நிலையில், மே 28ஆம் தேதி ஒரு மாஸ் பிளானுக்கு அச்சாரம் போட்டுள்ளார் விஜய். நாடாளுமன்றம் திறக்கும் அதே நாளில் அத்தனை பேரையும் தன் பக்கம் திருப்பும் வகையில் ஒரு திட்டம் தீட்டியுள்ளார் விஜய்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' என்ற திட்டம் மூலம் உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி காலை 11 மணி முதல் இலவச மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.

மே 28 : தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக அரசியலில் இறங்குவதாக விஜய் அறிவிக்காவிட்டாலும், கடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை நேரில் அழைத்துச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய்.
விஜய் அரசியல் : அண்மையில், விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
பிளான் ரெடி : இந்நிலையில் தான், மே 28ஆம் தேதி அனைத்து இடங்களிலும், இலவச மதிய உணவு வழங்க விஜய் உத்தரவிட்டுள்ளார். பசி என்னும் பிணியைத் தீர்ப்போம் என்கிற நோக்கத்துடன் ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய்.

அண்மையில் நடந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியானது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியலும், செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று விஜய் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியானது.
அரசியல் அஸ்திவாரம் : வரும் காலத்தில் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்படும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆயத்தமாக இருக்க வேண்டும், அரசியல் இயக்கத்திலும் செயல்படக்கூடாது என்றும் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் புஸ்ஸி ஆனந்த், இந்த இலவச மதிய உணவு திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28ஆம் தேதி திறந்து வைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பி இருக்கும் சூழலில், அன்றைய தினமே தன்மீது கவனம் பதியும்படி மாஸான சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளார் விஜய். விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு இந்த சம்பவமே வலுவான அஸ்திவாரமாக இருக்கும் என்ற பேச்சுகள் இப்போதே எழுந்துள்ளன.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications