வாரிசு பட ரிலீசுக்கு சிக்கல்? ரசிகர்களை சந்திக்கும் விஜய்! பனையூர் ஆபீசில் சுட சுட ரெடியான பிரியாணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் "வாரிசு" திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ள நிலையில், இன்று முக்கிய தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரியளவில் திருப்திப்படுத்தவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இதனால் இவரது அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடி வருகிறது. அடுத்த படம் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

விஜய்

விஜய்

இந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகிபாபு என மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

 பரபர அறிக்கை

பரபர அறிக்கை

விஜய் திரைப்படங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியீட்டின் போது பிரச்சினை ஏற்பட்டு வருவது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். இந்த வாரிசு திரைப்படத்திற்கு இதுவரை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சென்ற நிலையில், இப்போது இதுவும் பிரச்சினையைச் சந்தித்து உள்ளது. அதாவது பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து உள்ளது.

சோகம்

சோகம்

இதனால் விஜயின் வாரிசு திரைப்படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் ரீலீசாவதில் எங்குப் பிரச்சினை வருமோ என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேலும், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிக்கைக்குத் தமிழ்த் திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் விஜய் தரப்பில் இருந்து மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய அழைப்பு சென்றுள்ளது.

மீட்டிங்

மீட்டிங்

அதன்படி நடிகர் விஜய் தனது ரசிகர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வாரிசு திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ள நிலையில், இந்த மீட்டிங் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

முன்னதாக, பனையூர் அலுவலகத்திற்குச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் குவிந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு மதிய உணவாக 500க்கும் மேற்பட்டோருக்குப் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இதற்கிடையே ட்விட்டரில் கூட பனையூர்_பிரியாணி என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+