பறந்த உத்தரவு.. அம்பேத்கரிலிருந்து அரசியல் தொடங்கும் நடிகர் விஜய்? நாளை பெரிய பிளான் இருக்கோ?
சென்னை: நாளை அம்பேத்கர் பிறந்தநாளை (ஏப்ரல் 14) விஜய் மக்கள் இயக்கம் விமர்சையாக கொண்டாடவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அம்பேத்கரிலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் விஜய் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய், அரசியலுக்கு வருவதற்கான அடித்தளங்களை பலமாக்கி வருகிறார். அரசியலில் ஈடுபடுவதற்காகவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரசிகர்களை வைத்து செய்து வருகிறார்.

விஜய்யும் பல்வேறு விஷயங்களுக்காக நேரடியாக குரல் கொடுத்துள்ளார். அதேபோல் தேர்தல் அரசியலிலும் தங்கள் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். அதன்படி கடந்த முறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் எந்த இடத்திலும் விஜய் நேரில் சென்று ஓட்டு கேட்கவே இல்லை. ரசிகர்கள் மன்றத்தினருக்கு வாக்களியுங்கள் என்று விஜய் ஒரு அறிக்கைகூட விட்டது இல்லை.
அதேநேரம் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் அவ்வப்போது தனது மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து விஜய் ஆலோசனையும் நடத்தினார். இந்நிலையில் தான் நாளை அம்பேத்கர் பிறந்தநாளை (ஏப்ரல் 14) விஜய் மக்கள் இயக்கம் விமர்சையாக கொண்டாட விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அம்பேத்கரிலிருந்து தனது அரசியல் பயணத்தை நடிகர் விஜய் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் அம்பேத்கர் சிலை, உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தினரை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் தனது அரசியல் பயணத்தை அம்பேத்கரிலிருந்து நடிகர் விஜய் அரசியலை தொடங்குவாரோ என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை வைத்து அரசியல் இறங்கும் திட்டமிட்டு அம்பேத்கர் பிறந்த நாளில் விஜய் ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வரும் 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனவே விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபை தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்குள் பெரிய திட்டத்துடன் விஜய் களம் இறங்கலாம் என்று கூறப்படுகிறது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்?












Click it and Unblock the Notifications