Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் விஜயின் சம்பளம் இதுதான்! அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்! மனம்மாறி அரசியலுக்கு வரவேற்ற சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுபற்றி நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை கூறி அவர் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் எனக்கூறிய சீமான் தனது வழக்கமான எதிர்ப்பை புறம்தள்ளிவிட்டு அரசியலுக்கு அவரை வரவேற்றது கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அரசியலுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது உடல்நலனை காரணம் காட்டி பின்வாங்கினார்.

இந்நிலையில் தான் நடிகர் ரஜினியை போல் நடிகர் விஜய் குறித்த தகவல்கள் தற்போது உலாவி வருகின்றனர். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருகிறார். அதற்கான பணிகளை அவர் மறைமுகமாக தொடங்கி உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு தொகுதி வாரியாக நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள் குறித்த முழுவிபரங்களையும் அவர் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளன.

Actor Vijay is the super star of tamil cinima and gets Rs.150 cr salary and i welcoms him for political, says Seeman

இதற்கிடையே தான் முதல் முறையாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களை பாராட்டி, உதவித்தொகை வழங்கினார். அங்கும் அவர் தேர்தலில் ஓட்டளிப்பது பற்றி பேசினார். பணம் வாங்கி கொண்டு யாரும் ஓட்டளிக்க கூடாது. எந்த காரணத்தை கொண்டும் ஓட்டை விற்பனை செய்யக்கூடாது. இதனை கடைப்பிடிப்பதோடு, பெற்றோர்களிடம் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது ‛‛நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது. காசு வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள் என பேசியுள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு சீமான் கூறியதாவது:

தம்பி விஜய் கூறிய கருத்து ஏற்புடையது தான். இந்த கருத்தை நான் பல ஆண்டுகளாக கூறி வரும் நிலையில் விஜய் அதனை வலியுறுத்தி உள்ளார். எனக்கும் முன்பாக அம்பேத்கர் இந்த கருத்தை பேசியுள்ளார். ‛சில ரொட்டி துண்டுகளுக்காக மதிப்புமிக்க உரிமைகளை விற்பது என்பது அவமானத்துக்குரியது' என அம்பேத்கர் பேசியுள்ளார். முத்துராமலிங்க தேவரும் இந்த கருத்தை பேசி இருக்கிறார். ஓட்டுக்கு காசு கொடுக்கிறவர்ன பாவி.. காசு வாங்கி கொண்டு ஓட்டுப்போடுகிறன் தேசத்துரோகி என முத்துராமலிங்க தேவர் கூறியுள்ளார்.

அண்ணா, ‛‛தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பானா'' என கேள்வி கேட்டுள்ளார். ஆனால் இன்று அவரது பிள்ளைகள் தான் தவிட்டுக்கு தங்கத்தை 50 ஆண்டுகளாக வாங்கி வருகின்றனர். இந்த கொடுமை தொடர்ந்து வருகிறது. தேர்தலில் வாக்குகுளை பெற காசு கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டு போட்டியிட தடை விதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நேர்மையாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உள்ளார். தமிழ்நாட்டில் முதன்மை நடிகராக இருக்கிறார். உண்மையில் அவர் தான் இப்போதைக்கு சூப்பர் ஸ்டார். ரூ.150 கோடி சம்பளம் வாங்குகிறார். ரூ.30 கோடி வரி என்றால் ரூ.120 கோடி கையில் கிடைக்கிறது. அதனை பொருட்படுத்தாமல் அரசியலுக்கு வருகிறார் என்றால் வரலாம். அதனை வரவேற்க வேண்டியது தான். தமிழர்களுக்கு நிறைய கோடிக்கணக்கான பிரச்சனை உள்ளது. இதற்காக போராட நிறைய தலைமைகள், கட்சிகள் தேவைப்படுகிறது'' என்றார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வரக்கூடாது என சீமான் பேசி வரும் நிலையில் விஜய் விவகாரத்தில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது தெளிவாகி உள்ளது. இந்த வேளையில், ‛‛நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இணைந்து பணியாற்றுவீர்களா?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛எங்களுக்கு யாருடைய துணையும் தேவையில்லை. எங்களது கொள்கை, கோட்பாடு, பாதை, பயணம் என்பது வேறுவிதமானது. இருப்பினும் இந்த விஷயத்தில் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்'' என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+