பிரசாந்த் கிஷோரை சந்தித்தாரா நடிகர் விஜய்?.. 2024 லோக்சபா தேர்தலில் பெரிய பிளானுடன் களமிறங்குகிறாரா?
சென்னை: வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்த ஐபேக் நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் ரகிசயமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வரும் எண்ணம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. விஜய் நடிக்கும் படங்களில் அரசியல் வசனங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் தலைவா படத்திலிருந்தே அவரது படம் வெளியாவதில் சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.
அதில் Time to lead என இடம் பெற்றிருந்த வாசகத்திற்காகவே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அந்த படத்தை திரையிட அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மெர்சல் திரைப்படம் வெளியான போது ஜிஎஸ்டி குறித்த விஜய் வசனம் பாஜகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டது.

ரெய்டு
இது போன்று அடுத்தடுத்த படங்கள் மூலம் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு அப்பட்டமாக தெரிந்தது. விஜய்க்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே அவரது வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் விஜய் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னரே கட்சியை தொடங்கி போட்டியிடுவார் என சொல்லப்பட்டது.

தந்தை, தாயை எதிர்த்த விஜய்
ஆனால் அவர் கட்சியை தொடங்கவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபாவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். மேலும் ஒரு ஆடியோ லாஞ்சில், "வர்ற டிரெயின்லலாம் ஏறிட கூடாது. நமக்கான ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செல்லும் இடத்திற்கு சரியாக செல்ல முடியும்" என விஜய் பேசியிருந்தார்.

விஜய் அறிவுரை
இது தந்தை எஸ்.ஏ.சி.க்கு விஜய் சொல்லும் அறிவுரை என்றே பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட தனது புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொள்ள விஜய் அனுமதி அளித்தார்.

122 இடங்களில் வெற்றி
இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 122 இடங்களில் வென்றனர். இது உங்கள் வெற்றி என சொல்வது போல் தேர்தலில் வென்றவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது விஜய் ஓரமாக மிகவும் தன்னடக்கத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இதையடுத்து நகர்ப்புறத் தேர்தலிலும் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

விஜய் பிளான்
அதற்கு முன்னதாக விஜய்யை புதுவை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை பெற்றனர். இந்த 2 தேர்தல்களுமே விஜய் அரசியல் கட்சியை தொடங்க வெள்ளோட்டமாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் விஜய் வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்கி, தனது கட்சி பலத்தை சோதனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு?
இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் விஜய் முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நிகழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விஜய் தரப்பிடம் கேட்ட போது , அப்படி ஒரு சந்திப்பே நடைபெறவில்லை. விஜய் சென்னையில் இல்லை, இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் எல்லாம் வதந்தி என்றும் தெரிவித்தனர்.
-
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
சென்னை களம்! திமுகவுக்குச் சாதகமாக மாறும் விஜய்யின் வியூகம்? கமல் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கலாமே -
விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க -
காலை முதல் நோன்பு கடைபிடித்த விஜய்.. குல்லா அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு! -
‘ஜன நாயகன்’ சென்சார் சிக்கல் தொடர்கிறது… படம் பார்க்க ரிவைசிங் கமிட்டியே வரலையாம்! விஜய்க்கு ஷாக்! -
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி! -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
நடிப்புக்கு டாட்டா சொன்ன விஜய்.. மலையாளத்திற்கு மாற்ற துடிக்கும் நடிகை.. ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை -
ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம்












Click it and Unblock the Notifications