முக ஸ்டாலினை சந்தித்த விஜய்.. துரைமுருகனுடன் கைகுலுக்கல்.. கல்யாண வீட்டில் கலகல சந்திப்பு
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து வரும் நிலையில் முக ஸ்டாலினை விஜய் சந்திக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஆரம்பத்தில் ரஜினியை மட்டுமே அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் 20 முதல் 25 ஆண்டுகள் கழித்து அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இறுதியில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். எனினும் அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை.
அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு கட்சியை தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார்.

படங்களில் அரசியல் இல்லை
இதையடுத்து அஜித்தை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வந்தனர். ஆனால் அஜித்துக்கு அரசியல் பிடிக்காது என்பதால் அவரது படங்களிலும் அரசியல் காட்சிகள் ஏதும் பிரதிபலிக்காதவாறு படங்களை தேர்வு செய்வார்.

சந்திரசேகர்
தமிழிசையின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அஜித் வெளியிட்ட அறிக்கையில் தான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டார். இந்த நிலையில் விஜய்யையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். குறிப்பாக அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் விரும்புகிறார்.

கைகுலுக்கல்
அண்மையில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து விஜய் மீதான அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடிகர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுடன் சிரித்து பேசுவது போலவும் துரைமுருகனுடன் கைகுலுக்குவது போலவும் புகைப்படங்கள் வைரலாகின.
|
துரைமுருகன்
பின்னர் என்னவென விசாரித்தால், சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் முரசொலி நாளிதழின் ஆசிரியர் செல்வத்தின் இல்ல விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டதும் மரியாதை நிமித்தமாக ஸ்டாலினையும் துரைமுருகனையும் விஜய் சந்தித்தது தெரியவந்தது. நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து வரும் நிலையில் முக ஸ்டாலினை விஜய் சந்திக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications