சவால்களை சமாளிக்க.. நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து ஓபிஎஸ் சொல்வதை பாருங்க
சென்னை: புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றும், எதிர்வரும் சவால்களை சமாளித்து விஜய் தமிழக அரசியலில் வலம் வருவார் என்றும் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
வெற்றி என்ற தனது தந்தை சந்திரசேகர் இயக்கிய திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய தற்போது அதே பெயரை வைத்து, தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவாரா?.. இல்லையா?.. என்ற கேள்விக்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

தந்தையின் இயக்கத்தில் முதலில் சிறு சிறு வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த விஜய், தந்தையின் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு என்று படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் அவரது படங்கள் பெரிய வெற்றியடையாவிட்டாலும் விஜயின் தொடர் முயற்சியாலும், உழைப்பாலும் மக்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
அரசியலுக்கு வந்தார் விஜய்: தொடர்ந்து தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றார் விஜய். தமிழகத்தில் விஜய் படம் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை மதித்து வரும் நடிகர் விஜய், தனது நடிகர் சங்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனால், விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்று கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது.
மேலும் தான் நடிக்கும் படங்களிலும் அரசியல் கலந்த வசனங்கள் இருந்து வந்தது. இதேபோல் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜயின் செயல்பாடுகள் அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. தொடர்ந்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து கொண்டு இருந்தார். இதனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
தமிழக வெற்றி கழகம்: இந்த நிலையில் தான் தனது அரசியல் வருகையை நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை.. யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சவால்களை சமாளித்து: இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியிருப்பதற்கும் வாழ்த்துக்களையும், எதிர்வரும் சவால்களை சந்தித்து தமிழக அரசியலில் விஜய் வலம் வருவார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:-
சிறந்த திரைப்பட நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர் வரும் சவால்களை சமாளித்து விஜய் தமிழக அரசியலில் வலம் வருவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!










Click it and Unblock the Notifications