வாடிய முகம்-கண்ணில் தெரிந்த சோகம்.. சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்தை மறக்காத விஜய்.. நேரில் அஞ்சலி
சென்னை: நடிகரும், தேமுதிகவின் நிறுவன தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினர். சினிமா துறயைில் தூக்கிவிட்டு விஜயகாந்தை அவர் மறந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி எம்எல்ஏவானார். அதன்பிறகு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். இதையடுத்து அவரது உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

தேமுதிக கட்சி மீட்டிங், ஆலோசனை கூட்டங்களில் மட்டுமே விஜயகாந்த் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் 18 ம் தேதி முதல் சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்றார்.
இந்த சிகிச்சை முடித்து அவர் கடந்த 12ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு காலமானார்.
இதையடுத்து விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று இரவில் நடிகர் விஜய் வாடிய முகத்துடன் நேரில் வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதோடு விஜயகாந்த்தின் அருகே கண்கலங்கி நின்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
விஜய் திரைத்துறையில் கால்பதித்த சமயத்தில் அவரது படங்கள் சரியாக ஓடவில்லை. இதையடுத்து அவர் அவரது தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் விஜயை திரைத்துறையில் வளர்த்துவிட வேண்டி விஜயகாந்திடம் உதவியை நாடினார். இதையடுத்து செந்தூர பாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தார். இதன்மூலம் அந்த படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அதன்பிறகு சில படங்களை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு திரைத்துறையில் வெற்றி கிடைத்தது.
இப்படி தன்னை திரைத்துறையில் வளர உதவிய நடிகர் விஜயகாந்தை விஜய் மறந்துவிட்டதாக விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. சமீபத்தில் கூட விஜயகாந்த் பிறந்தநாளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்காததை விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இத்தகைய சூழலில் தான் பழைய நன்றிக்கடனை மறவாமல் நடிகர் விஜய் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.
விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்திய போட்டோ மற்றுமு் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications