நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற விஜய்.. சைக்கிள் என்ன விலை தெரியுமா?
சென்னை: விஜய் வாக்குச் சாவடிக்கு சைக்கிள் ஓட்டி வந்தாலும் வந்தார், ஊரெல்லாம் அந்த சைக்கிளை பற்றியே பேச்சு இருக்கிறது.
ஒரு பொருளை ஒரு பிரபல நடிகரோ, நடிகையோ பயன்படுத்திவிட்டால் அந்த பொருள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துவிடும். அந்த வகையில் விஜய் பயன்படுத்தியதால் ஒரு பொருளின் சிறப்பம்சங்களை மக்கள் தேடி வருகிறார்கள்.
தமிழக சட்டசபைக்கு நேற்றைய தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டிலிருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு விஜய் சைக்கிளில் சென்றார்.

விஜய்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விஜய் அவ்வாறு சைக்கிளில் வந்ததாக சொல்லப்பட்டது. பின்னர் தனது வீடு பக்கத்தில் இருப்பதால் கார் கொண்டு சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் விஜய் சைக்கிளில் வாக்களிக்க சென்றதாக அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ரசிகர்கள்
விஜய் வாக்குச் சாவடிக்கு சைக்கிள் ஓட்டிச் சென்றார் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அந்த சைக்கிளின் விலை , சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர் ஓட்டிச் சென்ற சைக்கிளின் எடை 16 கிலோவாகும்.

பிரேக்குகள்
அந்த சைக்கிளின் விலை ரூ 22, 500 ஆகும். அதன் நிறம் கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என்ற இரட்டை வண்ணங்களில் உள்ளது. கியர் சைக்கிளான அதில் 24 ஸ்பீடு கியர் அமைக்கப்பட்டுள்ளது. பிரேக் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் கொண்டவையாகும்.

மாடல்
டயர்கள் 29 க்கு 2.1 அங்குலம் உடைய எம்டிபி டயர்கள் உள்ளன. எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார். மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மாடலையே பயன்படுத்தியுள்ளார் விஜய். இந்த மாடல் 2019-இல் மான்ட்ரா நிறுவனம் வெளியிட்டதாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications