காருக்குள் அண்ணன் ஆடிய டான்ஸ்.. ட்வீட் போட்டு மகிழ்ந்த தங்கை.. இது நடிகர் விஜய் வீட்டின் குஷி!
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் காரில் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை சஞ்சயின் தங்கை திவ்யா ஷாஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் இலங்கை பெண்ணான தனது ரசிகை சங்கீதாவை 1999-ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.
மகள் திவ்யா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருப்பார். மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் வரும் நாயகனை அறிமுகப்படுத்தும் பாடலான நான் அடிச்சாதாங்கமாட்ட என்ற பாடலில் ஒரு காட்சியில் வந்தார்.

பேட்மிண்டன்
விஜய்யின் மகளுக்கு பேட்மிண்டன் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். அது போல் சஞ்சய்க்கு அப்பாவை போல் சினிமாவில்தான் ஆர்வம். இதற்காக கனடாவில் உள்ள பிலிம் மேக்கிங்கில் படித்து வருகிறார். இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

தீம் மியூசிக்
இந்த நிலையில் சஞ்சய் நண்பர்களுடன் காரில் தந்தையின் மாஸ்டர் படத்தின் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதை சஞ்சயின் தங்கை திவ்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நல்லா ஜாலியாக இருங்கள் என கூறியுள்ளார் திவ்யா.
|
அவசியம்
இவர் இந்த வீடியோ மட்டுமல்லாது தனது அண்ணன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த இரு வீடியோக்களையும் தனது தந்தைக்கு டேக் செய்துள்ளார். மரம் நடுவதன் அவசியம் குறித்து புகைப்படம் வெளியிட்டிருந்தார் திவ்யா.

முக்கிய பதிவுகள்
இது போல் விஜய், தனது குடும்பத்தினர் குறித்து முக்கிய பதிவுகளை பகிர்ந்து வருகிறார் ஷாஷா. சட்டசபை தேர்தலில் விஜய் வாக்களித்த புகைப்படம், கே வி ஆனந்திற்கு இரங்கல், அஜித்தும் விஜய்யும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிட்டு தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து என டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கிறார் ஷாஷா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications