இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே?
சென்னை; தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பின் விளிம்பில் நிற்கிறது தேர்தலை நோக்கி நகரும் வேளையில், தற்போதைய பேசுபொருள் - தளபதி விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'.
பெரும்பாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் காணும் தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனது கோட்டையைத் தக்கவைக்குமா? அல்லது விஜய்யின் வருகை மொத்த ஆட்டத்தையும் கலைத்துப் போடுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

8 சதவீத வாக்குகள்: யாருக்குப் பலவீனம்?
தேர்தல் களத்தில் விஜய் 8 சதவீத வாக்குகளைப் பிரிப்பதாக வைத்துக்கொண்டால், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களையுமே பாதிக்கும். ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் உள்ளது.
சூழல் 1: விஜய்யின் 8 சதவீத வாக்குகளில், 4% அதிமுகவிடமிருந்தும், 2% திமுகவிடமிருந்தும் வந்தால், அது திமுகவுக்குத்தான் லாபம். இந்த நிலையில் திமுக கூட்டணி 173 இடங்களைப் பிடித்து அசுர பலம் பெறும். அதிமுக 61 இடங்களாகச் சுருங்கும்.
சூழல் 2: இது அப்படியே தலைகீழாக மாறி, விஜய்க்கு வரும் 8 சதவீதத்தில் 4% திமுகவிடமிருந்து பிரிந்தால், திமுக கூட்டணி 142 இடங்களையும், அதிமுக 92 இடங்களையும் கைப்பற்றும். அதாவது, விஜய் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் அது திமுகவின் வெற்றியைப் பெரிய அளவில் தடுக்காது என்பதே இந்த சிமுலேஷனின் முடிவு.
திமுகவின் 'ஸ்வீட் ஸ்பாட்' - அதிமுகவின் நடுக்கம்!
விஜய்யின் வாக்கு வங்கி 10 சதவீதமாக உயரும்போது, அதன் தாக்கம் இன்னும் தீவிரமாகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், விஜய்க்கு அதிக வாக்குகள் விழ விழ, அது ஆளுங்கட்சியான திமுகவுக்குச் சாதகமாக முடிகிறது.
விஜய் பெறும் 10 சதவீதத்தில் பெரும்பகுதி (சுமார் 2.4% திமுக, மீதி அதிமுக மற்றும் இதர கட்சிகள்) அதிமுகவிடமிருந்து பிரிந்தால், திமுக 176 இடங்களை வாரிக் குவிக்கும். அதிமுக 58 இடங்களுக்குத் தள்ளப்படும். விஜய்யின் வாக்கு வங்கி 12 சதவீதமாக உயர்ந்தாலும், இதே ஃபார்முலா தொடர்ந்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும் என்கிறது இந்தக் கணிப்பு.
திமுகவின் 'நைட்மேர்': எப்போது சாத்தியம்?
ஆனால், ஸ்டாலின் டீமுக்கு ஒரு 'நைட்மேர்' (Nightmare) சூழலும் காத்திருக்கிறது. விஜய் வாங்கும் 12 சதவீத வாக்குகளில், ஒருவேளை 8 சதவீதம் திமுகவின் ஓட்டு வங்கியில் இருந்து பிரிந்து, வெறும் 2 சதவீதம் மட்டும் அதிமுகவிடமிருந்து பிரிந்தால்... ஆட்டம் அப்படியே மாறும்!
இந்தச் சூழலில் அதிமுக 127 இடங்களைப் பிடித்து ஆட்சியை எட்டிப்பிடிக்கும். திமுக 107 இடங்களாகக் குறையும். முதன்முறையாக ஒரு சிமுலேஷனில் அதிமுக முன்னிலை பெறக் காரணமாவது - விஜய்!
14 சதவீத மேஜிக்: 'கேம் சேஞ்சரா' அல்லது 'நாக்கவுட்டா'?
விஜய் 14 சதவீத வாக்குகளைப் பெற்று, அதில் 8.4% அதிமுகவிடமிருந்து வந்தால், அது அதிமுகவை 51 இடங்களுக்குத் தள்ளி மொத்தமாக காலி செய்துவிடும். ஒருவேளை அதே 8.4% திமுகவிடமிருந்து பிரிந்தால், திமுக 119 இடங்களும், அதிமுக 115 இடங்களும் பெற்று இழுபறி நிலையுடன் கடும் மோதல் ஏற்படும்.
முக்கியக் கேள்விகள் இவைதான்:
விஜய் மற்றவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் 'கேம் சேஞ்சராக' இருப்பாரா?
அல்லது பெரிய கட்சிகளுக்கு 'நாக்கவுட்' கொடுப்பாரா?
இறுதியில் அவர் யாருடைய வாக்குகளை அதிகம் பிரிக்கப்போகிறார்?
வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு, மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை. அன்று மாலை சூரியன் மறையும்போது, தமிழக அரசியலில் விசில் அளிக்குமா.. இலை மலருமா அல்லது மீண்டும் உதயசூரியன் ஜொலிக்குமா என்பது தெரிந்துவிடும்!
-
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்! -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
விஜய் அவரது குழந்தையை கைவிடமாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆதவ் அர்ஜுனா ஐடியா -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட் -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்!












Click it and Unblock the Notifications