நீங்கள் நினைப்பது விரைவில் நடக்கும்.. மாற்றுக் கட்சிக்கு போகாதீங்க.. விஜய் அட்வைஸ்?
சென்னை: நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும், யாரும் மாற்றுக் கட்சியில் இணையாதீர்கள் என நடிகர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தின் கீழ் விஜய் ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த இயக்கத்தின் மூலம் நடிகர் விஜய்யும் உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். அது போல் அவரது சமீபத்திய படங்களிலும் அரசியல் வாடை வீசியது.

வெற்றி விழா
மேலும் இசை வெளியீட்டு விழா, படத்தின் வெற்றி விழா என பெரும்பாலான விழாக்களில் விஜய் அரசியல் பேசினார். அவரது வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு வந்த போதும் அசராத விஜய், மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசுகையில் வாழ்க்கை என்பது நதி மாதிரி, சிலர் வணங்குவாங்க, சிலர் வரவேற்பாங்க, சிலர் கல் எறிவாங்க, ஆனால் நாம் கடமையை செஞ்சுட்டு போய்ட்டே இருக்கணும் என்றார்.

பிரவேசம்
இந்த நிலையில் விஜய் குறித்த அரசியல் பிரவேசம் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யின் பெயரை பயன்படுத்தி ஒரு கட்சியை தொடங்கியபோது தனது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என விஜய் தடாலடியாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

காணொலி
இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் விஜய் அதிருப்தி ரசிகர்களை அழைத்து காணொலி மூலம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின.

விரைவில் நடைபெறும்
பனையூர் அலுவலகத்திற்கு அதிருப்தி நிர்வாகிகள், ரசிகர்களை வரவழைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது அவர் நீங்கள் நினைப்பது அனைத்தும் விரைவில் நடைபெறும். மாற்று கட்சியில் யாரும் சேர வேண்டாம் என நிர்வாகிகளை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications