விஜய் சேதுபதி, பிரபுதேவா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருது.. தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2017 ம் ஆண்டுக்கான, தமிழக அரசின் கலைமாமணி விருது விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நடிகர்கள் பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன் ஆகியோரும் விருதுகள் பெறுகிறார்கள்.

பல்வேறு துறைகளில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பட்டியலை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படுகின்றது. நகைச்சுவை நடிகர் பாண்டு, திரைப்பட நடிகை குட்டி பத்மினி, நடிகர்கள் ராஜசேகர், ராஜிவ், நாடக நகைச்சுவை நடிகர் வெங்கட்ராமன், இயற்றமிழ் பிரிவில் சங்கரசுப்பிரமணியன், வில்லிசையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இராஜகிளி விருது பெறுபவர்களின் முக்கியமானவர்கள்.

Actor Vijay Sethupathi, Prabhu Deva gets Tamilnadu Governments Kalaimamani awards

2012 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியலில் இதே போன்று 30 பேர் இடம் பிடித்துள்ளனர்.

ஆன்மீக இசை சொற்பொழிவாளர் உடையளூர் கே.கல்யாணராமன், திரைப்பட நடிகை ராஜஸ்ரீ, டி.ஆர்.வரலட்சுமி, கானா பாடல் கலைஞர் உலகநாதன், திரைப்பட இயக்குனர் சித்ரா லட்சுமணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள்.

இது போன்று 2013ம் ஆண்டுக்கு கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியலில் திரைப்பட நடிகர் பிரசன்னா, நடிகைகள் நளினி, காஞ்சனா தேவி, சாரதா, நடிகர்கள் பாண்டியராஜன், டிபி கஜேந்திரன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உள்ளிட்ட 19 பேர் அடங்குவர்.

2014ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவோர் மொத்தம் 20 பேர். அதில் திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, மூத்த பத்திரிக்கையாளர் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

2015ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியலில் 20 பேர் இடம் பெற்றுள்ளனர். நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு ஆகியோரும் முக்கியமானவர்கள்.

2016ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியலில் திரைப்பட நடிகர் சசிகுமார், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, சூரி , பத்திரிகையாளர் நெல்லை சுந்தரராஜன், சமய சொற்பொழிவாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

2017ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் மொத்தம் 28. அதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

2018 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பெயர் பட்டியலில் மொத்தம் 34 பேர் உள்ளனர். இதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தானம் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பின்னணி பாடகர் உன்னி மேனன் ஆகியோர் பெயர்களும், நையாண்டி மேளம் மற்றும் நாதஸ்வரம் பிரிவில் சிவகங்கை கருப்பையாவும் விருதை பெறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+