எப்படி இருக்கீங்க தம்பி..நேராக நாங்குநேரி சின்னத்துரையிடம் சென்ற விஜய்..! அரங்கமே சும்மா அதிருச்சுல!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற நடிகர் விஜய், மாணவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மேடையில் இருந்து இறங்கிய அவர், நேராக நாங்குநேரியில் சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் அருகே அமர்ந்தார்.
கடந்த 20223 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது தமிழக முழுவதும், பேசுபொருளானது. இதை அடுத்து 234 தொகுதிகளிலும் இரு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணி கடந்த வாரமே நிறைவு பெற்றது.

இதையடுத்து அவர்களுக்கு 'பாஸ்' வழங்கப்பட்டது. கடந்த முறை ஒரே நாளில் விஜய் மாணவ மாணவிகளை சந்தித்து நிலையில் இந்த முறை இரண்டு கட்டங்களாக சந்திக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் 'தமிழக வெற்றிக் கழகம்' சார்பாக இன்று விஜய் பாராட்டி வருகிறார்.
முதற்கட்டமாக வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த முறை விஜய் வீட்டிலிருந்து வரும் போதே பெரிய அளவில் மாஸ் காட்டினர் ரசிகர்கள். இந்த முறை அதனை தவிர்க்கும் வகையில் அதிகாலையிலேயே நிகழ்ச்சி நடக்கும் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலுக்கு வந்துவிட்டார். தொடர்ந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பலத்த சோதனைகளுக்கு பிறகு மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்ஃபோன், நோட்டு புத்தகம் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து காலை 9.30 மணியளவில் நடிகர் விஜய் அரங்கத்திற்குள் 'தளபதி.. தளபதி.. எங்கள் தளபதி' பாடல் பிண்ணனியில் ஒலிக்க அரங்கத்திற்குள் மாஸாக எண்ட்ரி கொடுத்தார். அப்போது அரங்கத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். அந்த சத்தம் அடங்கவே சுமார் 15 நிமிடங்கள் பிடித்தது. இதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்த விஜய் கையசைத்தார்.
தொடர்ந்து மேடையில் ஏறி நின்று அவர் மாணவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த பின் , மேடையில் இருந்து இறங்கி மாணவர்கள் உடனேயே அமர்ந்து கொண்டார். குறிப்பாக நடிகர் விஜய் கடந்த முறை மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த முறை விஜய் யாருக்கு பக்கத்தில் அமர்வார் என்பது எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரையின் அருகில் சென்று அமர்ந்தார். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது
யார் இந்த சின்னத்துரை?: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிவெறி ஊறிப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அடுத்து அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் ஏன் தங்களை பற்றி ஆசிரியர்களிடம் சொன்னாய் என மிரட்டியதோடு பள்ளி முடிந்த பின்பும் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்ற அவர்கள் சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தோர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவத்தை கேட்டு சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணனும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கைகள் வெட்டப்பட்டு தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்னத்திரை பிறர் உதவியோடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதினார். இந்த நிலையில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வையும் அவர் எழுதியிருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது.
அதில் தமிழ் பாடத்தில் சின்னத்துரை 71 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 93 மதிப்பெண்களும் எக்கனாமிக்சில் 42 மதிப்பெண்களும், காமர்சில் 84 மதிப்பெண்களும், அக்கவுண்டன்சியில் 85 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் 94 மதிப்பெண்களும் பெற்றார் மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று இருந்தார் சின்னதுரை. காயம் காரணமாக படிக்க முடியாமல் போனதால் அவரது மதிப்பெண் குறைந்திருக்கிறது இல்லையேல் இன்னும் அதிக மதிப்பெண்களை சின்னத்துரை பெற்றிருப்பார் என அவரது நண்பர்கள் கூறினார். இந்த நிலையில் விஜய் அவரை நேரில் வரவழைத்ததோடு, அவரது அருகேயே அமர வைத்துள்ளார் விஜய்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்











Click it and Unblock the Notifications