600க்கு 600 திண்டுக்கல் நந்தினிக்கு விஜய் கொடுத்த வைர நெக்லஸ்! விலை என்ன தெரியுமா?
சென்னை: பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் அளித்த வைர நெக்லஸின் விலை என்ன என்பது தெரியவந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 600-க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளார். அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார். அவர் வணிகவியல் பிரிவு எடுத்திருந்தார்.

இந்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அது போல் தனது வீட்டுக்கு மாணவியையும் அவருடைய குடும்பத்தினரையும் வரவழைத்த அமைச்சர் பெரியசாமி வாழ்த்தி நினைவு பரிசை வழங்கினார். அது போல் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணவி நந்தினி அவரிடம் ஆசி பெற்றார்.
மேலும் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்வதாக முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். நந்தினியின் தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத் தொழிலாளி. அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நந்தினி 10 ஆம் வகுப்பில் 491 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசாக கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி திண்டுக்கல்லில் மாணவியை அவருடைய வீட்டில் சந்தித்த வைரமுத்து தங்க பேனாவை கொடுத்தார். அது போல் நிறைய தன்னார்வலர்கள் மாணவிக்கு கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி நந்தினி எந்த கல்லூரியை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்தது.
நந்தினிக்கு மருத்துவம் படிக்க ஆசை இருந்த நிலையில் அந்த ஆசை ஒரு கட்டத்தில் சிஏ படிக்க வேண்டும் என்ற ஆசையாக மாறியது. இதனால் சிஏ படிக்க விருப்பம் தெரிவித்த நிலையில் கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவரை அழைத்து சீட் கொடுத்தது. அதன்படி நந்தினி B.Com (Professional Accounting) பிரிவில் சேர்ந்துள்ளார். அவருக்கான கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், விடுதி கட்டணம் என அனைத்தையும் அக்கல்லூரியே ஏற்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்தார். இந்த விழா கடந்த 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரை ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இந்த விழாவில் விஜய் 13 மணி நேரம் நின்று கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கு கால் வலி ஏற்பட்டது. எனினும் எதையும் பொருட்படுத்தாமல் கடைசி வரை நின்று ஊக்கத்தொகையை வழங்கினார்.
12 ஆம் வகுப்பு தேர்வில் முழு மதிப்பெண்களை பெற்ற நந்தினிக்கு ஊக்கத்தொகை வழங்கியதுடன் வைர நெக்லஸையும் பரிசாக கொடுத்தார். அந்த நெக்லஸை நந்தினியின் தாயிடம் கொடுத்து போட்டுவிட சொன்னார். இந்த விழாவுக்கு விஜய் ரூ 2 கோடி செலவு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மண்டப வாடகை ரூ 40 லட்சம் என சொல்லப்படுகிறது.
அது போல் மாணவர்களின் போக்குவரத்து, உணவு, தங்குமிடம், ஊக்கத்தொகை உள்ளிட்டவை சேர்த்து ரூ 2 கோடி இருக்கலாம் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார். அது போல் நந்தினிக்கு பரிசாக அளித்த நெக்லஸின் விலை ரூ 10 லட்சம் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications