விஜய்க்கு இன்று Extraordinary Luck Time! உதயநிதிக்கு சந்திராஷ்டமம்! தவெக ஜோதிடர் கணிப்பாம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் 9.15 மணிக்கெல்லாம் விஜய் முதல்வராவார் என்ற செய்தி வரும் என தவெகவின் செய்தி தொடர்பாளரும், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருமான ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை காட்டிலும் அதிகம்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குகள் பதிவாகின. இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கிட்டதட்ட மதிய வேளைக்கெல்லாம் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு தெரிந்து விடும்.
இந்த நிலையில் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் கூறியிருப்பதாவது: மே 4 ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ண தொடங்குவார்கள். அப்போது தபால் வாக்குகள் அரை மணி நேரத்திற்குள் எண்ணி முடிக்கப்படும்.
பிறகு 8.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணத் தொடங்குவார்கள். காலை 9.15 மணிக்கெல்லாம் தமிழகத்தில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும்.
நான் ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நாள், மே 4 ஆம் தேதி அற்புதமான நாள், இன்று தனுஷ் ராசி, விருச்சிக யோகம், விஜய்யின் கடக ராசியிலிருந்து 6 ஆம் இடத்தில் சந்திரன் இருக்கிறார். எனவே Extraordinary Lucky Time எங்க சாருக்கு (விஜய்க்கு)!
இன்று ஸ்டாலினுக்கு நல்ல நாள் கிடையாது. உதயநிதிக்கு இன்று சந்திராஷ்டமம். எடப்பாடி பழனிசாமிக்கு 4 ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால் இன்று அவருக்கு வீரியமான நாள்! எனவே இந்த நாள் விஜய்க்கு சிறப்பான நாள்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அதாவது மே 4 ஆம் தேதி உதயநிதிக்கு சந்திராஷ்டமம் என்கிறார். உதயநிதி ரிஷப ராசி, இன்று மேஷத்திற்குத்தான் சந்திராஷ்டமம். அமித்ஷாதான் மேஷ ராசி! ஜோதிட அடிப்படை கூட தெரியாமல் இவர் பேசி வருகிறார் என விமர்சிக்கிறார்கள்.
இந்த ராதன் பண்டிட், தமிழகத்தில் தவெக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும், விஜய் முதல்வராவார் என தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்த்த போது திமுக கூட்டணிக்குத்தான் அமோக வாய்ப்பு என சொல்லப்படுகிறது. அது போல் ஒரே ஒரு ஏஜென்சி மட்டும்தான் தவெக 98 முதல் 120 இடங்களில் வெல்ல வாய்ப்பு என்றார்கள். ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெல்ல வேண்டும்.
-
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி











Click it and Unblock the Notifications