Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி.. சிவராத்திரியில் அறிமுகம் செய்த விஜய்.. முதல் உறுப்பினராக சேர்ந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்தியேக செயலி ஒன்றை இன்று அறிமுகம் செய்தார். மகளிர் தினம், மகா சிவராத்திரி தினமான இன்று உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்துள்ள விஜய் கட்சியின் முதல் உறுப்பினராக இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சேர்க்கும் வகையில் பலதரப்பட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.

Actor Vijay to Launch Tamilaga Vetri kalagam membership application app on MahaShivratri Day

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை இன்றைய தினம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயத்துள்ளோம்.

இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு, மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளர் எஸ்.என். யாஸ்மின், மாநிலப் பொருளாளர் வி. சம்பத்குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஏ. விஜய் அன்பன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.எல். பிரபு ஆகிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக்கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியினை இன்று விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மகளிர் தினம், மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய விஜய் முதல் ஆளாக தன்னை இதில் இணைத்துள்ளார். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி அலுவலகத்தில் செயலியை விஜய் அறிமுகம் செய்துள்ளார். கட்சியின் முதல் உறுப்பினராக நடிகர் விஜய் இணைந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய:

1) WhatsApp users - https://bit.ly/tvkhq

2) TelegramApp users - https://t.me/tvkvijaybot

3) WebApp users - https://bit.ly/tvkfamily

4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555 என்று விஜய் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+