ஒரே கல்லில் 3 மாங்காய்.. 7 நாட்களில் எல்லாம் மாற போகுது.. அடித்து ஆடும் விஜய்.. இப்படி ஒரு முடிவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில்.. 3 முக்கியமான நடவடிக்கைகளை வரும் நாட்களில் அவர் எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒற்றுப்பிழை இருந்த நிலையில் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று மாறி உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின் கட்சிக்கு சின்னம் அளிக்கப்படும். அதேபோல் கட்சிக்கு கொடி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Actor Vijay to make 3 Major announcements on Tamizhaga Vetri Kazhagam party soon

3 நடவடிக்கை; இந்த நிலையில் நடிகர் விஜய் 3 முக்கியமான நடவடிக்கைகளை வரும் நாட்களில் அவர் எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ள நிலையில் செயலி ஒன்றை வெளியிட உள்ளாராம். அதன்படி அரசியல் பணிகளை நிர்வகிக்க வேண்டும், செயலியில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும், நேரடியாக மக்கள் குறைகளை கேட்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கட்சிக்கான நிதியை பெற வேண்டும், அறிக்கைகளை வெளியிட வேண்டும், மக்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக என்று தனியாக ஒரு செயலியை வெளியிட இருக்கிறாராம்.

அதோடு கட்சி சார்பாக 100 நிர்வாகிகளை பதவியில் அமர வைக்க உள்ளாராம். அதாவது 100 நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சியின் அடிமட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளாராம். கடைசியாக பூத் கமிட்டியை சென்னையில் மட்டும் முதல் கட்டமாக அமைப்பது தொடர்பான பணிகளை விஜய் முடிவு எடுக்க உள்ளாராம். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறதாம்.

அரசியல் திட்டம் என்ன: விஜயின் அரசியல் வருகை தொடர்பாக தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் ராம் குமார் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்., விஜயின் அரசியல் வருகை எதிர்பார்க்காத அறிவிப்புதான். இது சர்ப்ரைஸ் அறிவிப்பாக வந்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டு கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியை இப்போதுதான் பதிவு செய்துள்ளனர்.ஆனால் பிரம்மாண்ட கூட்டம் நடக்கும். கட்சியின் தொடக்க விழா கண்டிப்பாக பெரிதாக நடக்கும்.

நான் அரசியலுக்கு வரப்போகிறேன். பிரம்மாண்டமாக கட்சி தொடங்கி போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். கட்சிக்கு தற்போது செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு கட்சியின் பெயர் மட்டுமே பதிவு செய்தோம். கொள்கை, சின்னம், கொடி பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.

அதற்கான அப்டேட் வெளியாகும். சட்டென வசீகரிக்கும் சின்னம் ஒன்றை கொண்டு வர உள்ளோம். அதற்கான அறிவிப்பு வரும்., தமிழ்நாடு தமிழகம் என்பதெல்லாம் ஒன்றுதான். தமிழ்நாடு என்று ஆளுநர் சொல்லாமல் போனதற்கு வேறு காரணம் உள்ளது. தமிழகம் என்று அவர் சொல்ல காரணம் வேறு. ஆனால் நாங்கள் அப்படி எல்லாம் பிரித்து பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு - தமிழகம் என்பதை நாங்கள் ஒரே மாதிரி பார்க்கிறோம்.

அப்படி என்றால் விஜயின் அரசியல் கொள்கை எப்படி இருக்கும் என்று பாருங்கள். விஜய் மொத்தமாக சினிமாவை முடித்துவிட்டு அரசியலுக்கு வரப்போகிறார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அவர் அரசியலில் மொத்தமாக குதிக்க உள்ளார்.

ஜாதி பிரச்சனை: ஜாதி பிரச்சனை தொடங்கி மக்கள் பிரச்சனை வரை. பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் என்று பலரின் அரசியல் கொள்கையை சேர்த்து விஜய் அரசியல் செய்வார். மதத்தை வைத்து அரசியல் செய்வது யார்? ஜாதியை வைத்து அரசியல் செய்வது யார்? அதை எல்லாம் உடைக்க போகிறார் விஜய்.

அதை விஜய் அவரின் வாயில் இருந்து சொல்லுவார். தலைவன் கிட்ட இருந்து பெரிய உத்தரவுகள் விரைவில் வரும்.. விஜயகாந்திற்கு நடந்தது போல இங்கே நடக்காது. நாங்க பெரிய இடத்தோட மோத ரெடியா இருக்கோம், என்று ராம் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+