விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் ராகுல் காந்தி? பரபர தகவல்.. தமிழக வெற்றிக் கழகத்தின் பிளான் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். திரைத்துறையில் டாப் இடத்தில் இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

tvk manadu tamilaga vetri kazhagam actor vijay

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய இவர், கட்சி பணிகளைத் தொடர்ந்து கவனித்தே வருகிறார். கடந்த மாதம் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

மாநாடு: அடுத்த கட்டமாக மிகப் பிரம்மாண்டமாக மாநாடு ஒன்றை நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு இடங்கள் பரிசீலனையில் இருந்தது. திருச்சி, சேலம் எனப் பல ஊர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போலீசாரிடம் மனு அளித்திருந்தார். இதையடுத்து மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்றும் ஆய்வு நடத்தினர். இருப்பினும், மாநாட்டிற்கு அனுமதி கோரப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலை அருகே 300 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. மாநாடு நடந்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்பதால் அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

21 கேள்விகள்: இந்தச் சூழலில் விழுப்புரம் போலீசார் சமீபத்தில் விஜய் தரப்பிற்கு 21 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தது. மாநாட்டிற்கு வருவோருக்கு எப்படி உணவு வழங்கப்படும்? எத்தனை பேர் வருவார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் விஐபிகள் லிஸ்ட்? அவர்களான பாதுகாப்பு ஏற்பாடுகள்? மேடையின் சைஸ் என்ன? டாய்லெட் வசதிகள் எப்படி செய்யப்படும் என பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டிருந்தனர். அதற்கு த.வெ.க தரப்பில் விளக்கம் தரப்பட உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மாநாட்டுப் பணிகளை அக்கட்சியின் நிர்வாகிகள் ஆரம்பித்துள்ளனர். விஜய் கட்சியின் முதல் மாநாடு என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். இந்த மாநாட்டில் தான் கட்சிக் கொடி குறித்து விளக்கத்தை விஜய் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்த விவரங்களும் இதில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ராகுல் காந்தி: இதற்கிடையே இந்த மாநாட்டில் காங்கிரஸின் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சி இப்போது திமுக உடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், விஜய் மாநாட்டில் அவர் பங்கேற்றால் அது கூட்டணியில் சலசலப்பை உருவாக்கும். அதேநேரம் ராகுல் காந்தியின் ஆலோசனைப்படியே விஜய் கட்சி தொடங்கியதாகச் சமீபத்தில் காங். முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி கூறியிருந்த நிலையில், இந்தத் தகவல் தீயாகப் பரவியது.

விஜய் கட்சி: இதையடுத்து இந்த தகவலுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர். அதாவது இதுவரை விஐபி யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு என்றே விஜய் கட்சி தரப்பு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+