அறிமுகமாகும் செயலி.. அதிக உறுப்பினர்களை சேர்த்தால்தான் பதவி? செக் வைத்த தமிழக வெற்றிக் கழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு நிர்வாக பொறுப்பு உண்டு என்றும், அடுத்த வாரத்திற்குள் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு என தமிழக வெற்றிக் கழகத்திற்கு செயலி உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். கைவசம் இருக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அதற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் விஜய் கூறியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டார்.

Actor Vijay TTamilaga Vettri Kazhagam will soon launch app to add cadres in party

இதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண்பதாகவும் தெரிவித்தார். இவரது இந்த அறிவிப்பு என்பது அதிக கவனம் பெற்றது. இதற்கிடையே நடிகர் விஜய் அறிவித்துள்ள கட்சியின் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து கூறி வந்தனர். அதாவது வெற்றி கழகம் என்பதில் வெற்றி என்ற வார்த்தையில் "க்" விடுபட்டு இருப்பதாக கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய், தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என மாற்றிக்கொண்டார். தற்போது விஜய் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூழல் கிடைக்கும் போதெல்லாம் சூட்டிங்க் செல்லும் விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதேபோல் நேரம் கிடைக்கும் போது நிர்வாகிகளையும் விஜய் சந்தித்து வருகிறார்.

இதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைவர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பதவி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு என்று செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கு என்று அறிமுகம் செய்யப்படும் செயலி மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கலாம் என்றும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி அடுத்த வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+