புதிய கெட்டப்பில் விஜய்.. ‛ஜனநாயகன்' சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை பார்த்தும் தந்த க்யூட் ரியாக்ஷன்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் அவர் சினிமாவை விட்டு வெளியேற உள்ளார். தற்போது அவர் கடைசி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்துக்கு ‛ஜனநாயகன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் இன்று அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து விஜய் ரசிகர்களை பார்த்து கொடுத்த ரியாக்ஷன் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. இந்த தேர்தலை மையப்படுத்தி கட்சியை பலப்படுத்தும் பணியில் நடிகர் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும், இன்னும் அவர் முழுநேரம் அரசியல்வாதியாக மாறவில்லை. விரைவில் அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல் அவதாரம் எடுக்க உள்ளார். தற்போது அவர் கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி வருகிறார்.
விஜயின் கடைசி படத்துக்கு ‛ஜனநாயகன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை போரூர் செட்டியார் அகரம் பகுதியில் சூட்டிங் நடந்து வருகிறது. விஜய் தொடர்பான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் விஜயை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர்.
இதனை கவனித்த விஜய், ரசிகர்களை நோக்கி புன்சிரிப்புடன் கையசைத்தார். அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். தங்களின் செல்போனில் விஜயை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜயின் இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பு திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ளார். கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த டத்துக்கு பிறகு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக முழுநேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications