இதுதான் விஜயின் வாக்கு சதவிகிதம்.. அடித்து சொன்ன ரவீந்திரன் துரைசாமி.. இந்த நம்பரை பாருங்க!
சென்னை: விஜய் 4 சதவிகித வாக்குகளை தாண்ட முடியாது. நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க.. இதுதான் விஜயின் வாக்கு சதவிகிதம் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் நேற்று முதல்நாள் கட்சி சார்பாக பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த முதல் பொதுக்கூட்டத்தில் அவரின் பேச்சு செயல்பாடு கவனம் பெற்றது.

அரசியல்வாதி போல பேசாமல்.. நடிகர் போலவும் பேசாமல்.. வித்தியாசமான முறையில்.. மேடை நடுக்கம் இன்றி.. சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக விஜய் திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ.. அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதி. இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், என்ன நடந்தாலும் விஜய் 4 சதவிகித வாக்குகளை தாண்ட முடியாது. நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க.. இதுதான் விஜயின் வாக்கு சதவிகிதம். நான் களநிலவரத்தை சொல்கிறேன். 4 சதவிகிதத்தை தாண்ட முடியாது என்று சொல்கிறேன். அதுதான் நடக்க போகிறது. களத்தில் என்ன இருக்கிறதோ அதை வைத்துதான் சொல்ல போகிறேன்.
விஜய் பிரபலம்தான். எம்ஜிஆர் போல ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் எம்ஜிஆர் போல அரசியல்வாதி இல்லை. எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். அவர் திமுகவை உடைத்து கட்சி நிர்வாகிகளுடன் வெளியேறினார் .
இதனால் எம்ஜிஆர் அரசியல் ரீதியாக வெல்ல முடிந்தது. அப்போது பல கட்சிகள் உடைந்தன. காங்கிரஸ் கூட சரிவை சந்தித்தது. இதெல்லாம் எம்ஜிஆருக்கு சாதகமாக மாறியது. இப்போது விஜய்க்கு அந்த சூழல் இல்லை. நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக அந்த சூழல் இல்லை.
எம்ஜிஆர் எடுத்தது 30% வாக்குகள். அதில் 90% வாக்குகள் திமுகவின் அடிப்படை வாக்குகள். மற்ற வாக்குகள் வேண்டுமானால் எம்ஜிஆருக்கு கிடைத்தது. அதாவது 3% தான் எம்ஜிஆருக்கு கிடைத்தது. அதுதான் அரசியல் நிலை.
எம்ஜிஆருக்கே அதுதான் நிலை. அப்படி இருக்க விஜய்க்கு எப்படி இருக்கும்? விஜய் வீட்டுக்குள் இருந்து வருகிறார். எம்ஜிஆர் நேரடியாக வீட்டுக்குள் இருந்து வரவில்லை. அவர் கட்சியில் இருந்து வந்தார். ஆனால் விஜய் வீட்டிற்குள் இருந்து வருகிறார்.
விஜய் எந்த கட்சியில் இருந்து வருகிறார். அவருக்கு அரசியல் பின்னணி இல்லை. அரசியல் அடித்தளம் இல்லை. திமுகவின் அரசியல் அடித்தளத்தை எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் விஜய்க்கு அப்படி இல்லை. இதனால்தான் என்ன நடந்தாலும் விஜய் 4 சதவிகித வாக்குகளை தாண்ட முடியாது. நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க.. இதுதான் விஜயின் வாக்கு சதவிகிதம் என்று சொல்கிறேன்.
எம்ஜிஆரை விஜயுடன் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக இருந்தார். அதனால அவரால் அரசியலில் வெல்ல முடிந்தது. விஜயகாந்த் அரசியலில் வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் இதுதான். அவர் புதிய கட்சி தொடங்கினார்.. விஜயும் அதைத்தான் செய்கிறார்., என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications