தளபதி 71 ஐ விடுங்க! டெல்லி செல்லும் நடிகர் விஜய் டீம்! அரசியல் கட்சியின் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயர் என்ன மற்றும் அதை அவர் எப்போது அறிவிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு இதோ வருகிறார், அதோ வருகிறார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அவருடைய கட்சியை வைத்து ஆழம் பார்த்தார். பெரும்பாலான இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்றனர்.

அவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் விஜய்யின் அரசியல் ஆர்வம் என்பது அதிகரித்துவிட்டது. அதன் அச்சாரமாக அம்பேத்கர் சிலைக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி தனது நிர்வாகிகளை மாலை அணிவித்து மரியாதை செய்ய சொன்னார்.
10,12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விஜய் பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன் இரவு நேர பாடசாலை, மருத்துவ முகாம்கள், மிக்ஜாம் புயல் நிவாரணம் என தனது நிர்வாகிகளை விஜய் எப்போதும் பரபரப்பிலேயே வைத்திருக்கிறார். அந்த வகையில் அண்மையில் பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வரும் பிப்ரவரி 4ஆம் தேதி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி செல்லவுள்ளார் என தெரிகிறது. அவருடன் 25 -க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளும் செல்கிறார்களாம். நடிகர் விஜய் தொடங்கும் கட்சியின் பெயர் தமிழக முன்னேற்றக் கழகம் என இருக்கலாம் என தெரிகிறது.
பிப்ரவரி முதல் வாரமே கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகக் கூடும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடும் என தெரிகிறது. இவர் தனித்து போட்டியிடுவாரா இல்லை கூட்டணி அமைப்பாரா என்பது போக போகத்தான் தெரியும். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய போது கூட காசுக்காக ஓட்டுக்களை விற்க வேண்டாம் என விஜய் கேட்டுக் கொண்டிருந்தார்.
விஜய்யின் கொள்கை என்ன கோட்பாடுகள் என்ன என்பது குறித்தும் கட்சி ஆரம்பித்தவுடன் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இவர் அரசியலில் நிலைத்து நிற்பாரா இல்லை ஓரிரு தொகுதிகளில் ஜெயித்துவிட்டு பின்னர் காணாமல் போவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications