டிடிவி தினகரனுக்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய்.. அட.. கதை இப்படி போகுதா? அப்போ கன்பார்ம் போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் டிடிவி தினகரனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்..பியும் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் இன்று தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Actor Vijay wishes to AMMK general secretary TTV Dhinakaran

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில், "எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் அன்புச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், முன்னாள் அமைச்சரும் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம் அவர்களுக்கும் நன்றி.

மேலும், வாழ்த்து தெரிவித்த திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத் தம்பி ரவீந்திரநாத் அவர்கள், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் D.கணேசன், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர்களுக்கும் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் பலர் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யும், தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கும் விஜய் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் இறங்கப் போகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில், விஜய்யின் செயல்பாடுகள் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்து வருகின்றன. அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு விஜய் போனில் வாழ்த்துக் கூறி வருவது, அரசியலில் தான் இறங்கும்போது, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறுவதற்காகவே என்றும் விவாதிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+