வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ரொம்ப பொறுப்புமிக்க தம்பி! நடிகர் விஜயகுமார் ஆருடம்!
சென்னை: உதயநிதி ஸ்டாலினை வருங்கால முதலமைச்சர் என ஆருடம் கூறிய நடிகர் விஜயகுமார், எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செயல்படக் கூடியவர் அவர் என புகழாரம் சூடியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மாமன்னன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். எம்.ஜி.ஆர். அமைச்சராக இருந்த போது அவர் நடித்த கடைசி திரைப்படத்தில் தாம் நடித்திருப்பதாகவும் அதேபோல் இப்போது உதயநிதி அமைச்சராக இருக்கும் நிலையில் அவர் நடித்துள்ள கடைசி படத்திலும் தாம் நடித்திருப்பதாக நடிகர் விஜயகுமார் தெரிவித்தார்.

அன்றைய முதலமைச்சருடனும் தாம் நடித்திருக்கிறேன் வருங்கால முதலமைச்சருடனும் தாம் நடித்திருக்கிறேன் என்றும் இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனவும் பேசினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை எந்தவொரு காரியத்தையும் ஏனோ தானோ என்று செய்யமாட்டார் என்றும் மிகுந்த பொறுப்புடன் சிறப்பாக செயல்படக் கூடியவர் எனவும் பாராட்டினார்.
நடிகர் விஜயகுமாரின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என கூறப்படும் நிலையில் நடிகர் விஜயகுமார் அவரை முதலமைச்சராகவே ஆவார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாமம்மன் ஆடியோ ரிலீஸ் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், சினிமாவை விட உதயநிதிக்கு வேறு சில முக்கிய பொறுப்புகள் நிறைய இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது உதயநிதி வசம் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை இருப்பதால் துணை முதல்வருக்கு நிகரான பதவி என கடந்த ஆண்டு திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications