கைது நெருக்கடி? நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளன.
நடிகை விஜயலட்சுமி, சீமான் தம்மை ஏமாற்றியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் திருவள்ளூர் மாஜிஸ்திரேட், விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

மேலும் சீமான் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் எனவும் விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். இதனை உறுதி செய்யவும் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து சீமானை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானை கடந்த 9-ந் தேதி காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் கட்சிப் பணிகள் இருப்பதாக கூறி அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை.
இதனிடையே சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று விசாரணைக்காக சீமான் ஆஜராக கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்று 2-வது முறையாக விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் வழக்கறிஞர்கள் குழுதான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி இருந்தனர்.
சீமான் மீது விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது 6-வதாக மேலும் ஒரு பிரிவின் கீழ் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளும் சீமான் மீது பாய்ந்திருக்கிறது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும் சீமான், கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications