Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க "மாஸ்டர்" வரட்டும்.. இருக்கு கச்சேரி.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. !

மாஸ்டர் பட ஆடியோ விழாவுக்கு விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தளபதி விஜய்... ரசிகர்களும்... ரெய்டும்

    சென்னை: வருமான வரி சோதனையை விஜய் ரசிகர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. வேண்டும் என்றே விஜய்யை சீண்டி பார்க்கிறார்கள். இதற்கு அவர் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோபத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அத்தனை பேரின் கவனமும் மாஸ்டர் படம் பக்கம் திரும்பியுள்ளது.

    விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. எதுவுமே வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக தெரியவில்லை. கைப்பற்றியதாக வருமான வரித்துறையும் சொல்லவில்லை.

    இந்த நிலையில் விஜய்யை ஏன் அப்படி வலுக்கட்டாயமாக நெய்வேலியிலிருந்து அழைத்து வர வேண்டும். எதற்காக 2 நாள் ரெய்டு என்று அலைக்கழிக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் குமுறுகிறார்கள். இந்த நிலையில் நேற்று பாஜகவினர் நடத்திய போராட்டம், இந்த ரெய்டுக்குப் பின்னணியில் பாஜகதான் உள்ளதா என்ற கேள்வியையும் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

    தலைவா

    தலைவா

    பாஜகவினர் தொடர்ந்து விஜய்யை குறி வைத்து வருவது விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்பு தலைவா படத்திற்கு அதிமுக அரசிடமிருந்து சிக்கல் வந்தபோது அதிமுகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் திரும்பினார்கள். பின்னர் மெர்சல் பட விவகாரத்தில் பாஜக கிளப்பிய எதிர்ப்பால் பாஜகவுக்கு எதிராக மாறினர் விஜய் ரசிகர்கள்.

    வருமான வரி துறை

    வருமான வரி துறை

    இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் படம் தொடர்பாக விறுவிறுப்பாக ஷூட்டிங் போய்க் கொண்டுள்ள நிலையில், விஜய்யை வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அவர்களின் கோபம் மீண்டும் பாஜக மீது திரும்பியுள்ளது. பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார் விஜய் என்று அவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

    அரசியல் நெடி

    அரசியல் நெடி

    வழக்கமாக படங்களில் பெரிய அளவில் அரசியல் பேச மாட்டார் விஜய். ரஜினி படங்களில் வருவது போலெல்லாம் அவர் பூடகமாக பேச மாட்டார். மாறாக பேசுவதாக இருந்தால் நேரடியாகவே பேசி விடுவார். கத்தி படத்தில் காற்றை வைத்து அரசியல் செய்த பூமி இது என்று நேரடியாகவே 2ஜி ஊழலை குத்திக் காட்டினார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி நேரடியாகவே விமர்சித்திருந்தார். இதுதான் விஜய் ஸ்டைல்.

    மாஸ்டர்

    மாஸ்டர்

    அதேபோலத்தான் சர்க்கார் படத்திலும் பல கட்சிகளை மொத்தமாக போட்டு வெளுத்தெடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தயாராகி வரும் மாஸ்டர் படத்திலும் அதுபோல ஐட்டங்கள் நிறைய இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால்தான் ரெய்டு என்ற பெயரில் அவரை முடக்கப் பார்க்கிறார்களா என்றும் விஜய் ரசிகர்கள் கோபமாகியுள்ளனர்.

    காத்திருக்கிறோம்

    காத்திருக்கிறோம்

    தனது பட ஆடியோ விழாக்களில் ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்புவது விஜய் ஸ்டைல். கடந்த தர்பார் பட ஆடியோ விழாவிலும் கூட அவர் பரபரப்பாக பேசியிருந்தார். இப்போது இந்த ரெய்டு நடந்துள்ள பின்னணியில் எல்லா ரசிகர்களும் மாஸ்டர் பட ஆடியோ விழாவுக்காக காத்துக் கிடக்கின்றனர். கண்டிப்பாக பாஜகவுக்கான பதிலை அங்கு வைத்து எங்கள் விஜய் தருவார் என்று ரசிகர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். ஆக மொத்தம் தேவையில்லாமல் விஜய் ரசிகர்களை கிளப்பி விட்டு விட்டனர் என்றுதான் தோன்றுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+