நடிகர் விஜய் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்.. முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா?
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. சினிமா நடிகர்களாக இருந்து அரசியலில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தவிர யாராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. நடிகர் விஜய் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா பார்க்கலாம்.
அரசியல் தலைவர் ஆகும் யோகம்: ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். பணக்காரனாகவோ, அரசியல் தலைவராகவோ, புகழ் பெற்ற நடிகராக வருவதற்கோ ஒரு யோகம் வேண்டும். ஜாதக கட்டத்தில் கிரகங்களின் கூட்டணி பார்வை, சேர்க்கை, இருக்கும் இடத்தைப் பொறுத்து அந்த யோகங்கள் அமையும்.

நீச்ச பங்க ராஜ யோகம்: ஒரு கிரகம் நீச்சம் பெற்றிருந்து அந்த நீசம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் நீசம் பெற்ற கிரகம் இணைந்திருப்பது நீச பங்க ராஜயோக அமைப்பை தரும். இந்த யோகம் பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும்.
சந்திர மங்கல யோகம்: நடிகர் விஜய் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். அவரது ராசியில் சந்திரன் உடன் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோக அமைப்பு நடிகர் விஜய்க்கு உள்ளது.
சூரியன் சனி சேர்க்கை: ராஜ கிரகங்களான சூரியன், சனி சேர்ந்திருப்பது அரச பதவியை தேடித்தரும். கன்னி லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் சூரியன், சனி ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கின்றனர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் கேது இணைந்திருப்பதும் யோகமான அமைப்பு. கலைத்துறையில் பிரபலமான நடிகராக வருவதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கிறது.
இளைய தளபதி டூ தளபதி: நடிகர் விஜய் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியிருக்கிறார். அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் என்றாலும் அவர் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
ஆனி அமாவாசை: தனது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார் விஜய். ஜூன் 17 நிறைந்த அமாவாசை நாள். மிதுன ராசியில் சூரியன், சந்திரன் சேர்ந்திருக்க மாணவர்களுக்கு பரிசளித்து குருவின் பலத்தை அதிகரித்துக்கொண்டார்.
பேச்சில் கவர்ச்சி: அரசியல்வாதிகள் என்றாலே நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். நடிகர் விஜய் தற்போது நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். மாணவர்களிடம் அரசியல் தலைவர்கள் பற்றி பேசினார். லியோ வெற்றி விழாவில் எம்ஜிஆர் பற்றி பேசினார். நிறைய கொடுக்க வேண்டும் எம்ஜிஆர் போல புகழ் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கவனிக்கும் மக்கள்: இனி விஜய் பேசும் வார்த்தைகள் பலருக்கும் உதாரணமாக இருக்கும். விஜய் பேசும் வார்த்தைகளை கேட்கவே பலரும் விரும்புவார்கள். 10ஆம் வீட்டில் சனியுடன் புதன் சேர்ந்திருப்பதால் நகைச்சுவையாக பேசுவார். 2026ஆம் ஆண்டு என்று கேட்டதற்கு கூட முதலில் நகைக்சுவையாக பேசி விட்டு கப்பு முக்கியம் பிகிலு என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பெண்களின் ஆசி: நடிகர் விஜய் ஜாதகத்தில் சந்திரன் கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம். இவருக்கு பெண்களின் ஆசி தாய்மார்களின் ஆசி நிச்சயம் கிடைக்கும். எம்ஜிஆர் போல இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சனி பகவான் சுப வலிமையுடன் இருந்தால் தொண்டர்களின் ஆசி கிடைக்கும்.
சுக்கிர திசை: ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல வலிமையோடு இருப்பது அவசியம். சனி பலமாக இருப்பதால் ஜன வசியம் இருக்கும். விஜய் ஜாதகப்படி 2014ஆம் ஆண்டு முதல் சுக்கிர திசை நடைபெறுகிறது. இப்போது சுக்கிர திசை ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் போது நிறைய நெருக்கடியை சந்தித்தார் விஜய். அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்தார். சுக்கிரதிசை ஆரம்பித்த பிறகுதான் தொடங்கியது. காரணம் சுக்கிரன் உடன் தடைகளை ஏற்படுத்தும் கேது இருக்கிறார்.
வெற்றி நிச்சயம்: சுக்கிரன் வண்டி வாகனத்திற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதி. நடிகர் விஜய் வாங்கிய கார் மூலம் வழக்கு வந்தது.
இவருடைய பல திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துதான் வெற்றி கிடைத்துள்ளது. 2026ஆம் ஆண்டு இவர் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் தனது இருப்பை தக்க வைக்க முடியும்.
நான் யானைக்குதான் குறி வைப்பேன். பெரிய விஷயத்தை முயற்சி செய்கிறேன் என்று வெற்றி விழாவில் பேசிய விஜய் தெரிவித்துள்ளார். அவரது இலக்கு பெரியது. இப்போது விஜய்க்கு 49 வயதாகிறது. அவரது 52வது வயதில் இருந்து முழு அரசியலில் ஈடுபடுத்திக்கொள்வார். 2031ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
நாற்காலி கிடைக்குமா?: அப்பாவின் சட்டையை போட்டுக்கொள்ளவும், அப்பாவின் வாட்ச் கட்டவும், அப்பா அமர்ந்த நாற்காலியில் அமரவும் மகன் ஆசைப்படுவதில் தவறில்லை என்று விஜய் கூறியிருக்கிறார். சினிமா வேறு அரசியல் களம் வேறு. நடிகர் விஜய்க்கு அரியணை கிடைக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.
-
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications