திரையில் இருந்து தரையில்..2024ல் அரசியல் புதுவரவாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.. மாஸா? தமாஸா?
சென்னை: 2025க்கு வழிவிட்டு 2024 நம்மை விட்டு பிரிந்து செல்கிறது. எத்தனையோ மாற்றங்கள் இந்த ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் திரையுலகில் இருந்து அரசியலில் குதித்து இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். 2024ல் விஜய்யின் அரசியல் பயணம் எப்படி தொடங்கியது.. அவரது பாலிடிக் மாஸா? தமாஸா? என பார்க்கலாம்..
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த விஜய் அரசியலில் குறிக்கப் போகிறார் என்ற தகவல் புதிது கிடையாது. என்றாலும், 2024 அரசியலில் குதித்தார். அதற்கு முன்னதாகவே விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் அரசியல் பாதையில் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் 2024 தொடக்கத்தில் இருந்தே விஜய் அரசியலில் குதிப்பார் என கணிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக அது அறிவிக்கப்பட்டது. பிப்ரவரியில் இருந்து விஜய் எடுத்த அரசியல் நகர்வுகள், முடிவுகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
நடிகர் விஜய்:
2024ல் தன் விஜய் கட்சியை ஆரம்பித்திருந்தாலும், அதற்கு முன்னோட்டமாக 'லியோ' ஆடியோ வெளியீட்டு விழாவில், “நீங்கள் மன்னர்கள், நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்" என பேசினார். தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பணிகளை கவனித்த புஸ்ஸி ஆனந்த் பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்காக சென்றார். பின்னர் அவரே கட்சியின் பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம்:
அதே நாளில் நடிகர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாவும் அதற்கு தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தார் விஜய், அதில், . 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் , "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் இலக்கு என பிரகடனம் செய்யப்பட்டது.
திமுக - பாஜக எதிர்ப்பு:
ஆனால் அந்த அறிவிப்பில் இன்னொரு ஷாக் தகவலும் இடம் பெற்றிருந்தது. கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையே கட்சி ஆரம்பித்த பின் முதன்முறையாக மார்ச் 6.ல் புதுச்சேரி சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டார் விஜய். மார்ச் 8ல் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வாட்ஸாப் எண், தனி இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்ததாக தமிழகத்தில் பெரும் அரசியல் படுகொலையான ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் விஜய்.
விஜய் மாணவர்கள் சந்திப்பு:
விஜய் அரசியல் நகர்வுகளில் முக்கியமானது மாணவர்கள் சந்திப்பு. கடந்தாண்டே விஜய் மாணவர்களை சந்தித்து பரிசுகள் வழங்கிய நிலையில், கட்சியை ஆரம்பித்த பின் ஜூலை 3ஆம் தேதி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், நீட் விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கடுத்த முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், கொடிப் பாடலும் வெளியிடப்பட்டது.
பெரியாருக்கு மரியாதை:
தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்த கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்டதை விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி செப்-17ல் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஜய். பின்னர், செப்டம்பர் 20ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார் விஜய்.
சர்ச்சை அரசியல்:
இடையே விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையான நிலையில், ஆயுத பூஜை வாழ்த்து கூறி ட்வீட் போட்டது பேசு பொருளானது கவனிக்கத்தக்கது. பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலையில் நடைபெற்றது. தவெகவின் கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் பிரகடனப் படுத்தப்பட்டனர். திமுக, பாஜகவை தனது அரசியல் எதிரிகள் என மாநாட்டில் பேசியது பரபரப்பை கிளப்பியது.
நூல் வெளியீட்டு விழா:
சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டு 'திமுக கூட்டணி கணக்குகள் உடையும்’ என பேசியது பரபரப்பை கிளப்பியது. அதே நேரத்தில் விஜய் கடுமையான விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி அலுவலகத்தில் விஜய் நிவாரணம் வழங்கியது “ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்' என கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், பெரியார், அம்பேத்கருக்கு வீட்டில் இருந்தே மரியாதை செலுத்தினார் விஜய்.
ஊடக வெளிச்சம்:
இப்படியாக பிப்ரவரியில் தொடங்கிய விஜய்யின் அரசியல் பயணம் பரபரப்பாகவே இருந்தது. திமுக, அதிமுக, பாஜக, விசிக என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் ஏதாவது ஒரு வகையில் விஜய் குறித்து பேசினர்.. பேசுகின்றனர்.. இனியும் பேசுவார்கள்.. ஊடக வெளிச்சமும் விஜய்க்கு பிரகாசமாக இருக்கும் நிலையில், 2025 எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications