Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்டர்டேபிள் டீலிங்.. அமவுண்ட் வேட்டையில் தவெக மாவட்ட தலைகள்..? தலைவர் தளபதிக்கு வந்த தலைவலி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, லோக்கல் கட்சிகள் வரை தற்போது தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றார். இதனிடைய கட்சி ஆரம்பித்தும் களத்தில் இல்லாத தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு சில நிர்வாகிகள் பிரதான எதிர்க்கட்சிகளிடம் பேரம் பேசி வருவதாகவும், இந்த தகவல் தலைமைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இன்றைக்கு தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது தந்தை சந்திரசேகரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட விஜய், ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

Actor Vijays Tamil Nadu Vetri Kazhagam executives who are indirectly connected with political parties

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நடனம் என மேக்கிங்கிலும், நடிப்பு வரவில்லை இதெல்லாம் ஒரு முகமா என எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் அதற்கு பிறகு தனது கடின உழைப்பால் நாயகன் இடத்திற்கு உயர்ந்தார்.

நடிகர் விஜய்: காதல் காமெடி ஆக்சன் என பல்வேறு தரப்புகளிலும் கலந்து கட்டி அடித்து தற்போதைய சூழலில் நம்பர் ஒன் நாயகனாக விஜய் தான் இருக்கிறார் என அடித்துச் சொல்கின்றனர் திரையுலகினர். காரணம் விஜய் படம் அறிவிப்பு வெளிவந்தாலே கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் என்பது தான். திரையுலகிலும் சரி பொதுவாழ்விலும் சரி விஜய் எப்போதுமே மிகவும் கவனமாக செயல்பட்டு முடிவெடுக்க கூடியவர் அப்படித்தான் அவரது அரசியல் பயணமும் அமைந்திருக்கிறது ஆரம்பத்தில் இருந்தே தனது முடிவுகளை மிகவும் கவனமாக எடுத்துள்ளார்.

அரசியல் ஈடுபாடு: ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த விஜய் அதன் பிறகு சமூக அக்கறை உள்ள விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்து போதெல்லாம் விஜய் உண்ணாவிரதம் போராட்டங்களை அறிவித்து தானும் பங்கெடுத்தார். அதிலிருந்து இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகரிக்க தொடங்கியது. இதை அடுத்து தனது ரசிகர் மன்றங்களை விஜய், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக சூசகமாக அறிவித்தார்

தமிழக வெற்றிக் கழகம்: அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார். மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.

நிர்வாகிகள் பேரம்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தாலும் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அப்பகுதியைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது, தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒரு சில மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றிய பகுதி நிர்வாகிகளும் பிரபல அரசியல் கட்சி ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு ஆதரவளிக்கிறோம் என உறுதி அளித்து பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

மறைமுக பேச்சுவார்த்தை: மேலும் பகுதிக்கு ஏற்றார் போல் தொகுதிக்கு ஏற்றார் போல் ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் மறைமுகமாக இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் நிர்வாகிகளையும் அவ்வாறே செயல்பட வேண்டும் என வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே இது போன்ற ஒரு புகாரில் சிக்கிய மாவட்ட தலைவர் ஒருவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தன் மீது எந்த கட்சியின் அரசியல் சாயமும் பூசப்பட்டு விடக்கூடாது என தெளிவாக இருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா தொடர்பான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

களையெடுக்கும் படலம்: அவ்வப்போது மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிப்பது என மட்டுமே அவரது கட்சி லெட்டர் பேடை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நிர்வாகிகள் சிலரது செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் மூலம் புகாராக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எந்தெந்த நிர்வாகிகள் எந்தெந்த கட்சிகளுடன் மறைமுக தொடர்பில் இருக்கிறார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தலுக்கு முன்னதாகவே கட்சி நிர்வாகிகளை களையெடுக்கும் படலம் தொடங்கும் என்கின்றனர் நம்மிடம் பேசிய நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+