விஜய் அரசியல் என்ட்ரியே அதிரிபுதிரி.. தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.இன்று மாலை 5 மணிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகம் செய்த நிலையில் அது முடங்கி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அரசியலுக்கும், திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நடிகர், நடிகையாக ஜொலித்தவர்கள் கட்சி தொடங்கி முதல்வர் பதவி வரை எட்டிப்பிடித்துள்ளனர். இதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உதாரணம். நடிகர் விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் வரை சென்றார்.

இதுதவிர சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி எம்எல்ஏ ஆனார். மேலும் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது கட்சி இன்னும் அரசியலில் வெற்றியை பதிவு செய்யவில்லை. மேலும் பல நடிகர், நடிகைகள் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க தயாராகி வருகிறார். மேலும் தற்போது கட்சியை பலப்படுத்தும் பணி மற்றும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் பணியை அவர் தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் புதிய செயலி ஒன்றை இன்றைய தினம் நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு நடிகர் விஜய் தனது கட்சியில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டார். மேலும் கட்சியின் உறுப்பினராக சேர்ந்த விஜய் வீடியோ வாயிலாக கோரிக்கையையும் வைத்தார்.
மேலும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய கீழே குறிப்பிட்டுள்ள லிங்குகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி
WhatsApp users - https://bit.ly/tvkhq
TelegramApp users - https://t.me/tvkvijaybot
WebApp users - https://bit.ly/tvkfamily
Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555
இந்த 3 லிங்க்குகள் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் அவரது கட்சியில் உறுப்பினராக சேர முடியும். இந்நிலையில் தான் ஒரே நேரத்தில் ஏராளாமனவர்கள் உறுப்பினராக சேர முயன்றனர். இதனால் தற்போது அனைத்து விஜய் கட்சியின் இணையதள செயலி முடங்கி உள்ளது. வாட்ஸ் அப், டெலிகிராம் என அனைத்து தளங்களும் முடங்கி உள்ளது. உறுப்பினராக இணைய முயற்சி செய்வோருக்கு ஒருமுறை பயன்படுத்தும் OTP செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்துள்ளனர். இதற்கிடையே தான் முடங்கிய செயலியை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications