Oneindia Special: எங்களுக்குனே வருவீங்களா? தவெக கொடியால் தவிக்கும் நண்பாஸ்..கட்டை போடும் காவல்துறை?
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். பல்வேறு பிரச்சனைகளை சர்ச்சைகளை கொடி விவகாரம் தொடங்கி வைத்த நிலையில், தற்போது கொடியேற்றுவதிலும் சிக்கல் இருப்பதாக புலம்புகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். குறிப்பாக கொடியேற்றும் இடங்களில் எல்லாம் காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாக புலம்புகின்றனர்.
தமிழ் சினிமாவின் தற்போதைக்கு அதிக வியாபாரம் கொண்ட உச்ச நடிகர் ஆக இருக்கிறார் விஜய். சாதாரணமாகவே அவரது படங்கள் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை சந்திக்கிறது.

விஜயின் சம்பளம், தயாரிப்பு செலவு, ப்ரோமோஷன் செலவு போக தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைக்கும் என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்க ஏராளமான போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் அவதாரம் எடுக்கப் போவதாக விஜய் அறிவித்தது பெரிய அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
சொன்னது போலவே தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்ததோடு கோட் படத்திற்குப் பிறகு ஒரு படத்தில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார் விஜய். தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்ததோடு அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் கொடி, அறிமுக பாடல் வெளியிடப்பட்டது. சிகப்பு மஞ்சள் வண்ணங்களில் இரு யானைகள், வாகை மலர், நட்சத்திரங்கள் இடம் பெற்று இருந்த அந்த கொடி ரசிகர்களையும் கட்சியினரையும் வெகுவாக கவர்ந்தது.

அதே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளையும் அந்த கொடி ஏற்படுத்தியது. தங்கள் அமைப்பின் வண்ணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் புகார் தெரிவித்தனர். மேலும் தங்கள் கட்சி சின்னமான யானை சின்னத்தை விஜய் பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் சிலர் சார்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்ததாக விஜய் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
கட்சியினர் பொது இடங்களிலும் தங்கள் வீடுகளிலும் கொடியை ஏற்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுத்திருந்தார் விஜய். இதை அடுத்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கழக நிர்வாகிகள் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தினர். பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடிகள் ஏற்றப்பட்டது. அதற்கு காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு கொடி ஏற்ற வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியதோடு பல இடங்களில் கொடிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறிய கட்சிகள் கூட பல்வேறு இடங்களில் பெரிய பெரிய கொடிக்கம்பங்களை அமைத்திருக்கும் நிலையில் அதற்கு அருகிலேயே நாங்கள் கொடியேற்ற முயற்சித்த போது காவல்துறையினர் தடுக்கின்றனர் என புகார் கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட நிர்வாகிகள் சிலர்,” தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சில நாட்களுக்கு முன்பு கொடியை அறிமுகப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக மாவட்ட தலைமை தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்கள் பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்..

இதற்காக கொடிக் கம்பங்கள், கொடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 234 தொகுதிகளிலும் கட்சி கொடியை ஏற்ற திட்டமிட்டு இருந்தோம். பல தொகுதிகளில் அது வெற்றிகரமாக ஏற்றப்பட்டது. இந்த நிலையில் சில இடங்களில் காவல்துறையினர் கெடுபிடி காட்டுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறவில்லை, தங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கவில்லை என ஏதாவது ஒரு காரணம் கூறி கொடியேற்றும் நிகழ்வை தடை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இதன் பின்னணியில் வேறு சில அரசியல் கட்சிகள் இருக்கின்றதோ என்ற சந்தேகம் இருக்கிறது. காரணம் சிறிய சிறிய கட்சிகள் கூட பெரிய கட்சி கொடி கம்பங்களை அமைத்திருக்கின்றனர். ஆனால் நாங்கள் சாதாரணமாக ஊர்வலமாகச் சென்றால் கூட போலீசார் தடுக்கின்றனர். மேலும் கொடியேற்றும் நிகழ்வை எப்படியாவது தடை செய்யும் நோக்கிலேயே அவர்கள் செயல்படுகிறார்களோ எனவும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது” என கூறுகின்றனர். பெயரை அறிவித்தது, கொடி அறிமுகம், கொடியேற்றும் நிகழ்வு, முதல் மாநில மாநாடு என ஆரம்பத்திலேயே விஜய்க்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசியல் களத்தில் ”வெற்றி வாகை” சூடுவாரா என்பது தான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.
-
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன!












Click it and Unblock the Notifications