விஜய் குசும்பு பிடிச்சவரா இருக்காரே.. திமுகவை எப்படி எல்லாம் சீண்டுறாரு பாருங்க.. இது தினுசா இருக்கே
சென்னை: நடிகர் விஜய் ட்விட்டரில் பலருக்கும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தெரிவித்துள்ள வாழ்த்து ஒன்று அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டில் வென்ற திமுகவிற்கு வாழ்த்து தெரிவிக்காமல் விஜய் தவிர்த்தார். அப்போதே விஜய் vs திமுக இடையே மோதல் நிலவுவதாக செய்திகள் வந்தன.

தவிர்த்த விஜய்; இப்படிப்பட்ட நிலையில்தான் , நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்ட விஜய், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும். சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாருக்கெல்லாம் நன்றி?: குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன்,
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. கமல்ஹாசன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கு. செல்வப்பெருந்தகை.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர். மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை. முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. எஸ். திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர்.
சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திருமதி. தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய திரு. ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள். நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன், என்று குறிப்பிட்டு உள்ளார் விஜய்.
நன்றி சொல்லவில்லை; எல்லோருக்கும் நன்றி சொன்ன விஜய்.. இதில் திமுகவை குறிப்பிடவில்லை. அதாவது திமுகதான் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை. அதேபோல் திமுகவினர் பெயரை விஜய் தனது அறிக்கையில் கூறவில்லை.
நடிகர் விஜய் ட்விட்டரில் பலருக்கும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தெரிவித்துள்ள வாழ்த்து ஒன்று அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
குசும்பு விஜய்: நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டதற்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். திமுகவிற்கு இதுவரை வாழ்த்து சொல்லாத அவர் ராகுலுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொல்லி உள்ளார்.
விஜய் வாழ்த்தினை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இது காங்கிரஸ் தரப்பில் வைரலாகி வருகிறது. வாழ்த்துச் சொல்வதிலும், வாழ்த்துச் சொல்லாமல் புறக்கணிப்பதிலும் சில அரசியலை மையப்படுத்தியே செய்து வருகிறார். குறிப்பாக, திமுகவை சீண்டுவதற்காகவே திட்டமிட்டு செய்பவர் விஜய். இந்த அரசியலை நன்றாக கையாள்கிறார் என்கிறார்கள்.. நல்ல குசும்பு பிடித்தவர்தான் விஜய் என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications