விஜய் போட்ட ஆர்டர்.. 234 தொகுதிகளிலும் 3 வேட்பாளர்கள் தேர்வு.. இறங்கி வேலை செய்யும் புஸ்ஸி ஆனந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தவெக சார்பாக 234 தொகுதிகளிலும் தற்காலிக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்து, பின்னர் விஜய் தலைமையில் அமைக்கப்படும் குழு ஒருவரை வேட்பாளராக இறுதி செய்யும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

2024ல் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பின் விக்கிரவாண்டி மாநாடு நடத்திய விஜய், சென்னையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தினார். அதேபோல் கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடத்திய போதும், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Actor Vijay s TVK Begins Provisional Candidate Selection for 2026 Tamil Nadu Assembly Election

தவெக நிகழ்ச்சி

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கட்டமைப்புகளை தவெக வலுப்படுத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய் இன்னும் ஜனநாயகன் படப்பிடிப்பை முடிக்காததால், இன்னும் முழு நேர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நாளை தவெக சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

சின்னம் முடிவு

இன்னொரு பக்கம் ஐஆர்எஸ் அருண் ராஜ் மத்திய அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் விரைவில் இணையவுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக சின்னம் தொடர்பாகவும் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், தவெகவில் அடுத்தக் கட்ட தேர்தல் பணிகள் விஜய் அறிவுறுத்தலின் பெயரில் தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்காலிக வேட்பாளர்கள்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். 234 தொகுதிகளுக்கும் தலா 3 பேரை தமிழக வெற்றிக் கழகம் தேர்வு செய்து வருகிறது. தற்காலிக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி இருக்கிறார். இந்த வேட்பாளர்களின் பின்னணியையும் விசாரிக்க தவெக திட்டமிட்டுள்ளது.

இறங்கி வேலை செய்யும் ஆனந்த்

அதாவது அந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகம், தேர்தல் செலவுகளை கையாளும் அளவிற்கு வசதி உள்ளதா என்பதை ஆராய உள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது, அந்த நிர்வாகி எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டுள்ளார் என்பதையும் பார்த்து வருகிறது. இதற்கான சேகரிப்பு பணிகள் மாவட்டச் செயலாளர்கள் மூலமாக செய்யப்படுகிறது.

கூட்டணி

அதேபோல் 3 பெயர்களில் இறுதியாக ஒருவரை தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைக்கப்படும் குழு இறுதி செய்யும் என்ற தகவல் கிடைத்துள்ளது. தவெக இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. வரும் நாட்களில் கூட்டணி அமையும் பட்சத்தில், அதற்கேற்ப வேட்பாளர்கள் மாற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

மதுரை மேற்கு

சில நாட்களுக்கு முன்பாக மதுரை மேற்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தொண்டர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டது. மேலும், விஜய் பிறந்தநாள் நெருங்கி வரும் சூழலில், அதன்பின் தமிழ்நாடு முழுவதும் அவரின் சுற்றுப்பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+