நடிகர் விக்ரம் சர்ச்சை.. அரியவகை குரங்கு வீடியோவால் வனத்துறையிடம் சிக்கும் சம்பந்தி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரியவகை குரங்குடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து விக்ரம் அந்த வீடியோவை 'டெலிட்' செய்தார். இருப்பினும் நடிகர் விக்ரம் வெளியிட்ட இந்த வீடியோவால் தற்போது அவரது சம்பந்திக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரிய வகை குரங்கை எப்படி அவர்கள் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்? அந்த குரங்கை வளர்ப்பதற்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக வனத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

actor-vikram-creates-controversy-after-released-videos-with-lar-gibbon-monkey-video-forest-official

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவரது மகள் பெயர் அக்‌ஷிதா. இவர் 'கெவின்கேர்' நிறுவனத்தின் நிறுவனரான சிகே ரங்கநாதன் என்பவரின் மகன் மனு ரஞ்சித்தை திருமணம் செய்தார்.

'கெவின்கேர்' நிறுவனம் தான் சிக் ஷாம்பு மீரா சீயக்காய், மீரா ஷாம்பு, மீரா தேங்காய் எண்ணெய், ருசி - சின்னிஸ் ஊறுகாய்ஃபேரெவர் கிரீம் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் நடிகர் விக்ரமால் 'கெவின்கேர்' நிறுவனத்தின் நிறுவனரும், அவரது சம்பந்தியுமான சிகே ரங்கநாதன் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் விக்ரம், அரிய வகை குரங்கை கொஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குரங்கை தனது மடியில் தூக்கி வைத்து அது கொடுக்கும் முகபாவணைகளை அப்படியே விக்ரமும் செய்து காட்டினார். இந்த வீடியோ அதிக கவனம் பெற்றது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தனர். அதேவேளையில் சர்ச்சையும் கிளம்பியது.

நடிகர் விக்ரம் உடன் வீடியோவில் இருந்த குரங்கு 'லார் கிப்பன்' (Lar Gippon) இனத்தை சேர்ந்தது. இது அழிவின் விளிம்பில் உள்ள குரங்கு இனமாகும். இதனால் இது பாதுகாக்கப்பட்டு வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது.அழிந்து வரும் நிலையில் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒப்பந்தம் மற்றுமு் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் இந்த இனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த குரங்கு இனத்தை வீடுகளில் வளர்க்க அனுமதி கிடையாது. ஆனால் விக்ரம் வெளியிட்ட வீடியோவில் அது வீட்டில் வளர்ப்பது போல் இருந்தது. இதனால் விக்ரமின் வீடியோ சர்ச்சையை கிளப்பியது. விக்ரம் எப்படி இந்த குரங்குடன் விளையாடினார்? யாருடைய வீட்டில் இந்த குரங்கு வளர்க்கப்படுகிறது? உண்மையில் இந்த குரங்கு வளர்க்க அனுமதி உண்டா? என்று பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர். மேலும் இந்த குரங்கு இனம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.

இதனால் விக்ரம் இந்த வீடியோவை 'டெலிட்' செய்தார். இருப்பினும் இந்த வீடியோ வனத்துறை கவனத்துக்கும் சென்றது. வனத்துறை முதற்கட்டமாக விசாரணையை தொடங்கி உள்ளது.அதன்படி இந்த குரங்கு விக்ரமின் சம்பந்தி சிகே ரங்கநாதனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மணிப்பூரில் இருந்து அவர் இந்த குரங்கை வாங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை இன்னும் யாரும் உறுதி செய்யவில்லை.

இதுதொடர்பாக சென்னை வனவிலங்கு வார்டன் யோகன் குலாலா, விக்ரமின் சம்பந்த்தி சிகே ரங்கராதனை சந்தித்து விசாரணை நடத்தினர். ரங்கநாதனின் வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது 'லார் கிப்பன்' எனும் அரிய வகை குரங்கு வைத்திருப்பதற்கான உரிய சான்று எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதுதொடர்பாக விக்ரம் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. அவரிடமும் வனத்துறை விரைவில் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது இதன்மூலம் நடிகர் விக்ரம் குரங்கு வீடியோ வெளியிட்டு தான் மட்டுமின்றி தனது மகள் அக்‌ஷிதாவின் மாமனார் சிகே ரங்கநாதனை சிக்கலில் சிக்க வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+