"உயிர் முக்கியம் பிகிலு”.. தவெக தலைவர் விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு நடிகர் விமல் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் ஆபத்தான முறையில் விரட்டிச் செல்வதற்கு நடிகர் விமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "உயிர் முக்கியம் பிகிலு" எனத் தெரிவித்துள்ள விமல், ஒரு நடிகரை பிடிக்கும் என்பதற்காக உயிரை பணயம் வைத்து வாகனங்களை பின்தொடர வேண்டாம் என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் அண்மையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வேனில் சென்றபோது அவரை பார்ப்பதற்காக வழிநெடுக தவெக தொண்டர்கள் திரண்டிருந்தனர். சில தவெக தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டிச் சென்றனர். ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் பலர் பைக்கில் பின்தொடர்ந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சிலர் விபத்தில் சிக்கினர்.

Vimal Urges Fans Not to Chase Vijay Vehicle

விபத்தில் சிக்கிய இளைஞரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவங்களால் தஞ்சை - திருச்சி சாலையில் ஆம்புலன்ஸ்கள் அலறியபடியே சென்றன. இதில் இளைஞர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தன்னை வாகனத்தில் பின்தொடர வேண்டாம் என்று வேலூர் கூட்டத்தில் விஜய் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தவெகவினர் விஜய்யை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு செல்லும்போது, அவரின் வாகனத்தின் பின்னால், பக்கவாட்டில் ரசிகர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன.

விஜய் ரசிகர்களுக்கு பல்வேறு தரப்பினரும் அட்வைஸ் கொடுத்தாலும், விஜய் வாகனத்தை பலரும் பின்தொடர்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை மதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடிகர் விமல் பேசிய வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+