இளம் நடிகரை தாக்கி ரவுடித்தனம்.. போலீஸ் வழக்கு பதிவு.. நடிகர் விமல் எஸ்கேப்!
நடிகர் விமல் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பிற மொழி நடிகரை தாக்கி அட்டூழியம் செய்த பிரபல தமிழ் நடிகர் விமல், இப்போது தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட நடிகர் அபிஷேக் என்பவர் சென்னை விருகம்பாக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடிகர் விமல் ஃபுல்போதையில் தனது நண்பர்களுடன் சென்று, தங்க ஒரு ரூம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் எல்லா ரூமும் புக் ஆகிவிடவும், எந்த ரூமும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் சொல்லிவிட்டது.

வம்பு செய்தார்
இதனால் மேனேஜனருடன் தகராறில் ஈடுபட்ட விமல், ஹோட்டல் வெளியே நின்று கொண்டிருந்த நடிகர் அபிஷேக்கிடம் வம்பு செய்திருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, விமல் அபிஷேக்கை தாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தகராறு
இதையடுத்து மதுபோதையில் விமல் தன்னை தாக்கிவிட்டதாக நடிகர் அபிஷேக் உடனடியாக புகார் அளிக்கவும், அதனடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் விமல் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323, 294 பி-யின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவு
இந்நிலையில் போலீசுக்கு பயந்து விமல் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் மிக தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனர். இதனிடையே, நடிகர் விமல் அபிஷேக்கை தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்
ஆரம்ப கட்டத்தில் களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பொதுமக்களின் அபிமானத்தை பெற்றவர் விமல். ஆனால் பெரிய அளவுக்கு இவரால் முன்னணி நடிகராக முடியவில்லை.

குடிப்பழக்கம்
இதில் குடிப்பழக்கமும் சேர்ந்துகொண்டதால், வரும் வாய்ப்புகளும் காணாமல் போவதாக தெரிகிறது. நல்ல நடிகர் ஒருவர் இப்படி குடிப்பழக்கத்துக்கும் ஆளாகி, இப்படி சர்ச்சையான விஷயங்களில் ஈடுபட்டுள்ளாரே என்று தமிழ் திரையுலகினர் மன வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications