டாஸ்மாக் முன்னாடி யார் பாருங்க.. அடிச்சு ஓட்டுங்க.. அடிச்சு ஓட்டுங்க.. "அட லூசு".. டிரெண்டிங் வீடியோ
சென்னை: டாஸ்மாக் கடையில் வரிசையில் காத்திருந்தவர்களை நடிகர் விஷால் அடித்து விரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஷால் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பதால் அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் திருட்டி விசிடியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதற்காக இவர் பல்வேறு சிடி கடைகளுக்கு சென்று அங்கு புதிய படங்களின் சிடிக்களை பறிமுதல் செய்தார்.

பின்னர் அவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். மேலும் கடைக்காரரையும் உன் வீட்டில் வந்து யாராவது திருடினால் உனக்கு எப்படி இருக்கும் என கேட்பார். இப்படியாக இவர் திருட்டு விசிடிகளை ஒழிக்க சில அதிரடிகளை செய்திருந்தார்.
இவர் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் காண்பதாக சொல்லிய நிலையில் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் விஷால் முறையிட்ட நிலையில் அதற்கு அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என பேட்டி அளித்தார்.
என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் கூடிய ஒரு கடிதத்தை கூட அவர்கள் கொடுக்கவில்லை. என்னிடம் வீடியோ, ஆதாரங்கள் உள்ளவை, அதை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் சமூக அக்கறையும் கொண்டவர். நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளை கையில் எடுப்பார்.
அது போல் அண்மையில் மிக்ஜாம் புயலின் போது தனது அண்ணாநகர் வீட்டில் தண்ணீர் தேங்கியிருப்பதாகவும் எம்பி எங்கே, எம்எல்ஏ எங்கே என கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு மேயர் ஆர்.பிரியாவும் விஷால் வீட்டு முன்பு மட்டும் தண்ணீர் தேங்கவில்லை, எல்லா பகுதிகளிலும்தான் தண்ணீர் தேங்கியுள்ளது என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு டாஸ்மாக் கடை முன்பு கூட்டம் அலை மோதுகிறது. அப்போது அங்கு வரும் நடிகர் விஷால், அங்கிருந்தவர்களை விரட்டி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளைஞரை ஏற்கெனவே போதையில்தான் இருக்கே, இதில் இன்னும் போதை வேண்டுமா என கேட்டு அடிக்கிறார். இது என்னது என கேட்க அதற்கு அந்த இளைஞரோ டாஸ்மாக் கடை என சொல்ல, ஓங்கி அடித்து அட லூசு இது ரத்னம் படத்தின் செட்யா போயா போயா என எல்லாரையும் விரட்டும் விஷால் , டாஸ்மாக்குன்னு பேரு போட்டாலே எல்லாரும் வந்து நிற்கிறாங்க, போங்கயா என விரட்டும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications