நடிகர் விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்.. டாஸ்மாக் விவகாரத்தில்.. எச்சரிக்கை விடுப்பது யார்னு பாருங்க!
சென்னை: டாஸ்மாக்கில் வந்து நிற்பவர்களை நடிகர் விஷால் விரட்டியடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நடிகர் விஷால் திருட்டு விசிடியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதற்காக இவர் பல்வேறு சிடி கடைகளுக்கு சென்று அங்கு புதிய படங்களின் சிடிக்களை பறிமுதல் செய்தார்.

பின்னர் அவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தி திருட்டு விசிடிகளை ஒழிக்க சில அதிரடிகளை செய்திருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் காண்பதாக சொல்லிய நிலையில் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் விஷால் முறையிட்ட நிலையில் அதற்கு அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என பேட்டி அளித்தார். என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் கூடிய ஒரு கடிதத்தை கூட அவர்கள் கொடுக்கவில்லை. என்னிடம் வீடியோ, ஆதாரங்கள் உள்ளன, அதை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் சமூக அக்கறையும் கொண்டவர். நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளை கையில் எடுப்பார். அது போல் அண்மையில் மிக்ஜாம் புயலின் போது தனது அண்ணாநகர் வீட்டில் தண்ணீர் தேங்கியிருப்பதாகவும் எம்பி எங்கே, எம்எல்ஏ எங்கே என கேட்டு கோபத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு மேயர் ஆர்.பிரியாவும் விஷால் வீட்டு முன்பு மட்டும் தண்ணீர் தேங்கவில்லை, எல்லா பகுதிகளிலும்தான் தண்ணீர் தேங்கியுள்ளது என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு டாஸ்மாக் கடை முன்பு கூட்டம் அலை மோதுகிறது. அப்போது அங்கு வரும் நடிகர் விஷால், அங்கிருந்தவர்களை விரட்டி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளைஞரை ஏற்கெனவே போதையில்தான் இருக்கே, இதில் இன்னும் போதை வேண்டுமா என கேட்டு அடிக்கிறார். இது என்னது என கேட்க அதற்கு அந்த இளைஞரோ டாஸ்மாக் கடை என சொல்ல, ஓங்கி அடித்து அட லூசு இது ரத்னம் படத்தின் செட்யா போயா போயா என எல்லாரையும் விரட்டும் விஷால் , டாஸ்மாக்குன்னு பேரு போட்டாலே எல்லாரும் வந்து நிற்கிறாங்க, போங்கயா என விரட்டும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் விஷால் நிஜமாகவே டாஸ்மாக் கடைக்கு வருவோரை விரட்டுவதாக கருதி அவருக்கு எதிராக தமிழ்நாடு மது குடிப்போர் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் விஷாலுக்கு கடும் எச்சரிக்கை, அரசு விற்கும் டாஸ்மாக் கடை முன்பாக (மதுபிரியர்களை) நிற்பவர்களை அடித்து விரட்டும் காட்சியை உடனே நீக்கு! நீக்கு!! என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications