விஷாலுக்கும் "அவருக்கும்" தொடர்பு.. புகார் கூறிய பெண் மீது பாய்ந்தது போக்சோ!
நடிகர் விஷால் மீது புகார் கூறிய பெண் மீது போஸ்கோ பாய்ந்தது.
Recommended Video

சென்னை: நடிகர் விஷால் மீது பாலியல் புகார் சொல்லி வீடியோ வெளியிட்ட விஸ்வதர்ஷினி மீது ராயப்பேட்டை மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஸ்வதர்ஷினி என்ற பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், "கோபாலபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் 4-வது மாடிக்கு நடுராத்திரி 2 மணிக்கு விஷால் வந்துவிட்டு, பிறகு பின்வாசல் வழியாக அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடினார்.
பின்வாசல் வழியாக விஷால் ஓடியது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விஷால் செய்த அட்டகாசங்கள் நிறைய உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. சிசிஎல் கிரிக்கெட் போட்டியின்போது அவர் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்பதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது என்றும் கூறி இருந்தார்.

ஓரின சேர்க்கை
விஷால் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டை திரையுலகம் உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்கவே இல்லைதான். ஆனால் இந்த பெண் இதுபோல சர்ச்சையான புகாரைக் கூறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 16 வயது சிறுமி தன்னிடம் ஓரினச் சேர்க்கைக்கு முயற்சித்ததாக புகார் கூறி சலசலப்பையும் ஏற்படுத்தினார்.

குழந்தைகள் நல ஆணையம்
இப்படி தன் மீது பாலியல் ரீதியான புகார் சொல்லவும் சிறுமி நேராக விஷ்வதர்ஷினி மீது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். ஆனால் பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

16 வயது சிறுமி
அதன் அடிப்படையில்தான் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் புகார் சொல்லப்பட்ட 16 வயது சிறுமியிடம் ராயப்பேட்டை மகளிர் போலீஸ் அவரிடம் வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என தெரியவந்தது.

விரைவில் கைது?
இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே விஸ்வதர்ஷினி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications