Vishal: எனக்கு திருமணம் எப்போது? இன்று பிற்பகல் அறிவிக்கிறேன்- விஷால்! மறுபடியும் மொதல்ல இருந்தா?
சென்னை: நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை இன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது திருமணம் குறித்து இன்று பிற்பகல் நல்ல செய்தி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டுப் பேசிய விஷால், "எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்" என்று கூறினார்.

ரஜினிக்கு பாராட்டு விழா
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா நடத்த பரிசீலனை செய்து வருவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில், விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஷாலின் திருமணம் அவரது பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்காததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், நடிகர் விஷால் தரப்பில், திருமணம் நின்றுபோகவில்லை, தள்ளிப் போயுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'யோகி' திரைப்பட விழாவில் நடிகர் விஷால், நடிகை தன்ஷிகாவை தான் காதலிப்பதாக அறிவித்தார். மேலும், இவர்களது திருமணம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, புதிதாகக் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
ஆனால், திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறாததால், விஷாலின் திருமணம் மீண்டும் நின்றுவிட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே, ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்பவருடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தத் திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விஷால் தரப்பில் விசாரித்தபோது, "திருமணம் நின்றுபோகவில்லை, தள்ளிப் போயுள்ளது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பணிகள் முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்திலேயே இவர்களது திருமணம் நடைபெறும்" எனத் தெரிவித்தனர். எனவே, ரசிகர்கள் விரைவில் இவர்களது திருமணத் தேதி அறிவிக்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications