அதிமுகவில் இணைந்த மறு நாளே பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் கொடுத்த அதிர்ச்சி.. பரபரக்கும் விஷால் கடிதம்
சென்னை: உங்களை நடிகர் சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என நடிகர் விஷால், நடிகர் பாக்யராஜுக்கு கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் கே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணியினர் ஐசரி கணேஷின் தூண்டுதலின் பேரில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலை நடத்த கூடாது என சில உறுப்பினர்களால் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை
ஆனாலும் அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் அப்படியே இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் அதில் நாசர் தலைமையிலான அணி வென்றது.

பாண்டவர் அணி
இதையடுத்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில்தான் நடிகர் கே பாக்யராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

காழ்ப்புணர்ச்சி
காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலை செய்துள்ளீர்கள். மேலும் சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கடிதம் எழுதியுள்ளார்கள்.

15 நாட்களில் விளக்கம்
இதுகுறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியிலிருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவ செய்யப்பட்டது. அதன்படி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு 15 நாட்ளில் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீக்கப்படுகிறாரா பாக்யராஜ்
பாக்யராஜை போல் ஏ.எல். உதயாவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர் கடிதம் வாயிலாகவோ நேரிலோ விளக்கம் அளிக்கலாம். இவர்கள் விளக்கம் ஏற்கப்படாத பட்சத்தில் இவர்கள் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவர் என தெரிகிறது. அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பாக்யராஜ் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications