Vishnu Vishal: விஷ்ணு விஷாலோட அக்கா இவ்ளோ பெரிய படிப்பாளியா? "இங்கயா" வேலை செய்யுறாங்க?
சென்னை: எனது அக்கா 10ஆம் வகுப்பு படித்த போது தமிழகத்திலேயே முதல் இடம் பெற்று தேர்ச்சி பெற்றார் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைவிட தனது அக்கா நன்றாக படிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடிக் குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, குள்ளநரி கூட்டம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் கிரிக்கெட் வீரரும் கூட! இவர் தமிழக டிஜிபியாக இருந்த ரமேஷ் குடாவ்லாவின் மகன். வேலூர் ஹோலி கிராஸ் பள்ளியில் படித்த இவர் எம்பிஏவை எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்தார்.

இவர் நடிகர் நடராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இவர்களுக்கு ஆர்யன் என்ற 8 வயது மகன் உள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் ரஜினியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்துவிட்டார்.
இந்த நிலையில் பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்த ஆண்டு மிரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இவரது குழந்தைக்கு நடிகர் ஆமீர் கான்தான் பெயரிட்டார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தின் போது இவர்கள் காட்டுப்பாக்கம் பகுதியில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த மீட்பு குழுவினர் இவர்களை பத்திரமாக மீட்டனர். அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்த ஆமீர்கானும் சிக்கிக் கொண்டார். பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை விட எனது அக்கா டர்சானியா குடாவ்லா நன்றாக படிப்பார். 10ஆம் வகுப்பு படித்த போது என் அக்கா மாநிலத்தில் முதல் இடம் பெற்றார். 12 ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம்.
பிட்ஸ் பிலானியில் என்ஜினியரிங் படித்தார். ஐஐஎம்ல அவங்களுக்கு சீட் கிடைத்தது. இப்போது ஜேபி மார்கன் நிறுவனத்தில் மிகப் பெரிய வங்கியோட சவுத் ஈஸ்ட் ஏசியாவோட தலைமை அதிகாரியா இருக்கிறார் என பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications