நாங்கள் துயரக் குழியில் விழுந்து விட்டோம் சுஜித்.. விவேக் கண்ணீர் #RIPSujith

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழப்பு

    சென்னை: உன்னை குழியிலிருந்து எடுத்து விட்டோம்.. நாங்கள் துயரக் குழியில் விழுந்து விட்டோம்.. எங்களை யார் எடுப்பது என்று கண்ணீருடன் கேட்டுள்ளார் நடிகர் விவேக்.

    ஒட்டு மொத்த தமிழ்நாடும் அழுது கொண்டிருக்கிறது குழந்தை சுஜித்தின் துயர முடிவை அறிந்து. இப்படி பறி கொடுத்து விட்டோமே என்ற வேதனையில் மக்கள் குமுறிக் கொண்டுள்ளனர். இதற்கெல்லாம் முடிவே இல்லையா.. இன்னும் எத்தனை சுஜித்துகளை இந்த தேசம் பறி கொடுக்கப் போகிறது என்ற ஆதங்கம் அத்தனை பேரின் மனதையும் அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

    Actor vivek condoles the death of sujith

    சுஜித்தின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் இதுகுறித்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
    கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி. சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது? என்று கண்ணீருடன் கேட்டுள்ளார்.


    பலரும், சுஜித்தை மீட்க முடியாமல் போனதை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்டு வருகின்றனர். நீ எங்களிடம் திரும்ப வருவாய் என்று இன்னும் கூட நம்புகிறோம் என்று பலரும் கண்ணீர் விட்டு அரற்றிக் கொண்டுள்ளனர். இந்த துயரத்திற்கு என்ன காரணம், யார் காரணம் என்பதை விட நீ எங்களிடம் இல்லாமல் போனதுதான் வலியாக இருக்கிறது என்று பலரும் அழுது கொண்டுள்ளனர்.

    தொழில்நுட்பங்கள் உதவி செய்யவில்லை, பிரார்த்தனைகள் கை கொடுக்கவில்லை.. உன்னை எங்களால் மீட்க முடியவில்லை. எங்களை மன்னித்து விடு சுஜித் என்று பலரும் கண்ணீர் விட்டுக் கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+