நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Recommended Video
திரைப்படப் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக்.

விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சுயநினைவோடு உள்ளதாக விவேக்கின் பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.
விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எக்மோ சிகிக்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர். சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார் விவேக். விரைவில் விவேக் குணமடைய வேண்டும் என்று திரைத்துறை பிரபலங்களும் அவரது ரசிகர்களும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications